இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
106
- பேராற்றல் வாய்ந்தது. ஒடுங்கிய எண்கள், எழுச்சிகள், விருப்பங்கள், சிக்கல்கள் ஆகியவற்றின் உறைவிடம். இதை நன்கு ஆராய்ந்தவர் பிராய்டு.
10.உளப்பண்டுவம் என்றால் என்ன?
- உளநோய்களைப் போக்கும் முறை. இந்நோய்கள் உளக் கோளாறுகளால் ஏற்படுபவை. அறிதுயில், கருத்தேற்றம், மருந்து முதலியவை உள நோய்களைப் போக்கப் பயன்படுபவை.
11.உளநோய் மருத்துவம் என்றால் என்ன?
- உளநோயை அறிந்து குணப்படுத்தலை ஆராயும் மருத்துவப் பிரிவு. இதைச் செய்பவர் உளநோய் மருத்துவர்.
12.ஜான் கேட் என்பவர் யார்?
- ஆஸ்திரேலிய உளநோய் மருத்துவர். இலித்தியத்தின் குணப்படுத்தும் பண்புகளைக் கண்டறிந்தவர். (1995)
13.பிராய்டு கொள்கை என்றால் என்ன?
- ஆஸ்திரிய உளவியலார் (1856-1936) சிக்மண்டு பிராய்டின் கொள்கை நரம்புக் கோளாறுகளையும் உளக்கோளாறுகளையும் விளக்குவது. இதற்கு மாற்று உளநோய்ப் பண்டுவம். இவர் உளப் பகுப்பின் தந்தை.
14.உளப்பகுப்பு என்றால் என்ன?
- மனித நடத்தையின் போக்கை உறுதி செய்வதில் நனவிலி நோக்கங்களின் இன்றியமையாமையை வலியுறுத்தும் உளவியல் கொள்கை. உளக்கோளாறுகளைப் போக்கும் ஒர் உளமருத்துவ முறையுமாகும். இதை உருவாக்கியவர் சிக்மண்ட் பிராய்டு.
15.இன்னாட்டம் (ld) என்றால் என்ன?
- உளப்பகுப்பு அறிஞர் பிராய்டு பயன்படுத்தும் சொல். மகிழ்ச்சியடைவதையே குறிக்ககோளாகக் கொண்ட உளப்போக்கினைக் குறிப்பது.
16.உளநோயியல் என்றால் என்ன?
- உளக்கோளாறுகளின் நுட்பத்தை ஆராய்தல்.
17. உளமருத்துவச் சமூகப்பணியாளர் என்பவர் யார்?