இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
107
- ஒர் உளமருத்துவரின் கீழ் வேலை செய்பவர். உள நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க உதவுபவர்.
18.செயற்கொள்கை என்றால் என்ன?
- நனவு நிலையினின்று எழும் விளைவுகளே உளவியல் ஆராய்ச்சிக்குரிய பொருள்கள் ஆகும் என்னும் கொள்கை.
19.ஆளுமை என்றால் என்ன?
- ஒருவன் உளப்பான்மைகளும் இயல்புகளும் அடங்கிய தொகுப்பு. இதை உள்ள அமைப்பின் தொகு மொத்தம் எனலாம். இது ஆளுக்கு ஆள் வேறுபடுவது.
20.ஆளுமை வடிவுரு என்றால் என்ன?
- பல ஆளுமைப் பண்புகளில் ஒருவரின் நிலைகளைத் தொகுத்துக் காட்டும் படம்.
21.தனியாளுமை என்றால் என்ன?
- இது உள்ளம், ஆளுமை, பண்பு முதலியவற்றில் வெளிப்படுவது. ஐன்ஸ்டின் தனியாளுமை சமூகத்திற்குப் பயனளித்துள்ளது. இட்லரின் தனியாளுமை சமூகக் கேட்டை விளைவித்தது.
22. வெளிப்பாடு என்றால் என்ன?
- எண்ணங்கள், கருத்துகள், உணர்ச்சிகள் ஆகியவற்றிலிருந்து விடுபட அவற்றைப் பிறருக்கு மாற்றுதல். எ-டு தன் பழியைப் பிறர் மீது சுமத்துதல்.
23. வெளிப்பாட்டுக் குறை என்றால் என்ன?
- எழுத்தில் சொற்களை அமைத்துக் கருத்துக்களைத் தெரிக்க இயலாமை.
24.வெளிப்பாட்டு நுணுக்கள் என்றால் என்ன?
- மைத் தடங்கள், படங்கள், வடிவங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தி ஆளுமையை ஆராயும் முறைகள். இம்முறைகளில் பயன்படுவனவற்றைத் தத்தம் ஆளுமைப் பண்புகளுக்கேற்ப ஒவ்வொருவரும் பொருள் கொள்வர்.
25.மறத்தல் என்றால் என்ன?
- கற்றவை நினைவிலிருந்து நீங்குவதைக் குறிக்கும். மறப்பது உள்ளத்தின் இயல்பு. நல்ல சூழ்நிலைகளில்