இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அறிவியல் வினா விடை
மருத்துவம்
1. அறிமுகம்
1. மருத்துவம் அல்லது மருத்துவ அறிவியல் என்றால் என்ன?
- நோய்களைப் போக்கி உடல் நலம் பேணும் கலையே மருத்துவம் ஆகும்.
2. மருத்துவத்திலுள்ள ஐந்து முறைகள் யாவை?
- 1. அயற்பண்டுவம் என்னும் அலோபதி.
- 2. ஓரியல் பண்டுவம் என்னும் ஓமியோபதி.
- 3. ஆயுர் வேதம்.
- 4. யுனானி.
- 5. சித்த மருத்துவம்.
- இவற்றில் முதல் முறை ஆங்கில முறை. நான்காவது அரபு முறை. ஏனைய மூன்றும் நம் நாட்டிற்குரியவை.
3. அயற்பண்டுவம் என்னும் சொல்லை உருவாக்கியவர் யார்?
- அனிமன் என்பார் (1755-1843) இச்சொல்லை ஆங்கிலத்தில் உருவாக்கினார்.
4. அயற்பண்டுவம் என்றால் என்ன?
- இது ஒரு நோய் நீக்குமுறை. குணமாக்கு நிலைக்கு எதிரான நிலைமை இதில் உருவாக்கப்படுகிறது. இதைச் செய்பவர் அயற்பண்டுவர்.
5. ஓரியல் பண்டுவம் (ஓமியோபதி) என்றால் என்ன?
- இது ஒரு நோய் நீக்குமுறை. இதில் பண்டுவம் செய்யப்படும் நோய்க்குரிய அறிகுறிகளை இயல்பான உடல் நலமுள்ளவரிடம் உண்டாக்குவதற்குரிய மருந்துகள் சிறிய அளவில் செலுத்தப்படும். இம்முறையை உருவாக்கியவர் அனிமன் ஆவார்.
6. மருத்துவத்தின் இரு பெரும் பிரிவுகள் யாவை?