109
34.நுண்ணறிவு என்றால் என்ன?
இயல்பறிவு. புதியன கற்றலும் பழைய பட்டறிவின் அடிப்படையில் பயன்பெறலும் ஆய்தலும் ஆகிய கற்றல்களைக் கொண்ட பொது உளத்திறன்.
35.நுண்ணறிவு ஈவு என்றால் என்ன?
நுண்ணறிவு ஆய்வு மூலம் கண்டறிந்த உள வயதிற்கும் கால வயதிற்கும் உள்ள வீதம்
ஈவு = உள அளவு
உடல் அளவு
ஒருவரின் உள்ளத்திறமையை உறுதிசெய்யப் பயன்படுவது.
36.சிக்கலறை என்றால் என்ன?
நுண்ணறிவு ஆய்வுகளில் பயன்படும் சிக்கலான அமைப்புள்ள அறை.
37.கற்றல் என்றால் என்ன?
தன் செயல்கள், பட்டறிவுகள் ஆகியவற்றினால் ஓர் உயிரியின் நடத்தையில் ஏற்படும் மாறுதல்களைக் குறிப்பது.
38.நேர்காணல் என்றால் என்ன?
நேரடியாகப் பேசி ஒருவரது இயல்புகளை அறியும் முறை.
39.பொதுக்காரணி என்றால் என்ன?
நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டுள்ள எல்லாச் செயல்களுக்கும் பொதுவாகவுள்ள நுண்ணறிவுக் கூறு.
40.சிறப்புக் காரணி என்றால் என்ன?
குறிப்பிட்ட ஒரு செயலுக்கு மட்டும் தேவைப்படும் தனிப்பட்ட நுண்ணறிவுக் காரணி.
41.ஏது காட்டல் என்றால் என்ன?
ஒன்றைச் செய்தபின் அதைச் சரி என நிலைநாட்டக் காரணங்கள் கூறுதல்.
42.அடையாளமறிதல் என்றால் என்ன?
ஒருவரிடம் அமையும் உள எழுச்சிப்பற்று. நடத்தை