இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
114
76.ஒதுக்கப்பட்ட குழந்தைகள் யாவை?
- இவற்றைப் பிற குழந்தைகள் வெறுக்கும். இவை அவற்றின் நட்பைப் பெற விரும்பும்.
77.காலுதற் விளையாட்டுக்க கொள்கை என்றால் என்ன?
- குழந்தைகளின் உள்ளத்தில் முடங்கிக் கிடக்கும் உளவெழுச்சிகள் வெளிப்படக் காரணமாக இருப்பது விளையாட்டுக் கொள்கையே.
78.புறக்கணிப்புக் குழந்தைகள் யாவை?
- பிற குழந்தைகள் இவற்றைப் புறக்கணிக்கும். இவை பிற குழந்தைகளை விரும்பும்.
79.பிற்பட்ட குழந்தை என்பது யாது?
- பள்ளிப் பாடங்களில் அதிகம் பின்னேற்றமுள்ள குழந்தை.
80.மீத்திறக் குழந்தை என்றால் என்ன?
- நுண்ணறிவு ஈவு 130 க்கு மேலுள்ள குழந்தை. இதற்குத் தனிப் பாடத் திட்டம் தேவை.
81.பாதுகாப்புணர்ச்சி என்றால் என்ன?
- ஒர் இன்றியமையா உளத்தேவை. இது நீங்கின் தகைப்பாடு இல்லாமை தோன்றும். உளவியல் சிக்கல் ஏற்படும். குழந்தைக்கு இவ்வுணர்ச்சி கட்டாயம் தேவை.
82.உளச்சிக்கல் என்பது யாது?
- இது ஒர் உளக்குறைபாடு, உளப்பகுப்பில் நனவிலித் தோற்றம் என்று குறிக்கப்படும் நனவாற்றலின் திசையையும் அமைப்பையும் இது உறுதி செய்வது.
83.இதன் வகைகள் யாவை?
- தாழ்வுச் சிக்கல், உயர்வுச் சிக்கல், ஓடிபஸ் சிக்கல் எனப்
84 உளப்பண்டுவத்தின் முதன்மையான நோக்கம் யாது?
- உளச்சிக்கலை நோயாளியின் நினைவிற்குக் கொண்டு வருவதே இதன் முதன்மையான நோக்கம்.
45.தாழ்வுச் சிக்கல் என்றால் என்ன?
- தாழ்வு மனப்பான்மை. குழந்தையிடத்து ஏற்படும் தன்னைப் பற்றிய தாழ்வான எண்ணம். இது ஆட்லரின்