115
தலையாய உளவியலின் மையக் கருத்து. தகுந்த வழியில் இது நீக்கப்படு வேண்டும்.
86. ஓடிபஸ் சிக்கல் என்றால் என்ன?
ஒரு சிறுவன் தன் தாயை இயல்பாக விரும்பித் தந்தை மீது பொறாமை கொள்ளுதல். கிரேக்கக் கட்டுக் கதைப்படி ஓடிபஸ் தன் தாயை மணந்து தந்தையைக் கொல்லுதல்.
87. பிராய்டு இதற்குக் கூறும் விளக்கம் என்ன?
குழவிப் பால் கொள்கையைக் கூறும் பொழுது, இதனைப் பிராய்டு விளக்கி, இது ஆண் குழவியிடம் இயல்பாக உள்ளது என்கிறார்.
88. எலக்ட்ரா சிக்கல் என்றால் என்ன?
மகளுக்குத் தந்தை மீதுள்ள அதிக அன்பு. அவள் தாயை வெறுப்பாள். கிரேக்கப் புனைவியலில் எலக்ட்ரா என்பவள் பெயரால் அமைந்தது.
89. ஒடுக்குதல் என்றால் என்ன?
கசப்பான எண்ணங்களை உள்ளத்திலிருந்து நீக்குதல்.
90. உளத்தாழ்ச்சி என்றால் என்ன?
ஏமாற்றம், இழப்பு, தோல்வி முதலியவற்றால் ஏற்படும் வருத்தம்.
91. இதன் வகைகள் யாவை?
1. வீறுமிகு தாழ்ச்சி - உண்மை விலகாது இருத்தல்
2. உள் தாழ்ச்சி - இதற்கு ஒரு முன்முடிவு இருக்கும்.
3. விருப்பமற்ற தாழ்ச்சி - விலக்கு நிற்கும் பொழுது ஏற்படுவது.
92. உளக்குறையாளர் என்பவர் யார்?
உள வளர்ச்சி குன்றிய நிலையில் இருப்பவர்.
93. உளக்குறை என்றால் என்ன?
உள்ளம் போதிய அளவுக்கு வளராத நிலை.
94. உளப்பிளவு என்றால் என்ன?
இது பல உளக் கோளாறுகளைக் குறிப்பது. உள எழுச்சி குறையும், தீர்வு காணும் நிலையும் கூர்மை நிலையும் பழுதுபடும்.