இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10
பொது மருத்துவம், அறுவை மருத்துவம்.
7. மருத்துவத்தின் பெரும் பிரிவுகள் யாவை?
1. இதயவியல் | 9. மூப்பியல் |
2. நரம்பியல் | 10. கருவியல் |
3. முடநீக்கியல் | 11. மருந்தியல் |
4. உட்கூறியல் | 12. உளமருத்துவம் |
5. கண்ணியல் | 13. உணர்வகற்றியல் |
6. காது மூக்கு-தொண்டை | 14. பதிய அறிவியல் |
7. மகளிர் நோய் | 15. பல் மருத்துவம் |
8. குழந்தை மருத்துவம் |
ஒரு பெரிய மருத்துவமனை இவை அனைத்தையும் கொண்டிருக்கும்.
8. மருத்துவத்தின் துணைப்பிரிவுகள் யாவை?
1. வானப் பயண மருத்துவம்
2. மனை மருத்துவம்
3. அவசர மருத்துவம்
4. சூழ்நிலை மருத்துவம்
5. ஆய்வுநிலை மருத்துவம்
6. குடும்ப மருத்துவம்
7. தடயவியல் மருத்துவம்
8. அணுவியல் மருத்துவம்
9. உள -உடல் மருத்துவம்
10. விளையாட்டு மருத்துவம்
11. வெப்பமண்டல மருத்துவம்
12. கால்நடை மருத்துவம்
13. தடுப்பு மருத்துவம்
9. வானப்பயண மருத்துவம் என்றால் என்ன?
வானப் பயணத் தொடர்பாகவுள்ள சிச்கல்களை ஆராய்வது. இவை உடலியல், மருத்துவம், உளவியல், நோய் இயல் ஆகிய துறைகள் தொடர்பானவை.
10. மனைமருத்துவம் என்றால் என்ன?
நோயாளியின் நோய்களை நேரடியாக ஆராய்வது.
11. அவசர மருத்துவம் என்றால் என்ன?