பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123


30. குருதிச் சோகையின் கல்லீரல் பண்டுவக் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
1934 இல் ஜார்ஜ் ஹாய்ட்விப்பிள், ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மைனட், வில்லியம் பேரி மர்பி ஆகிய மூவரும் பெற்றனர்.

31. கரு வளர்ச்சியின் அமைப்பின் விளைவை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1935 இல் ஹேன்ஸ் ஸ்பெமன் பெற்றார்.

32. நரம்புத் துடிப்புகளின் வேதிச் செலுத்துகைக் குறித்துக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1936 இல் ஹென்றி ஹேலட்டேல், ஆட்டோ லோவி ஆகிய இருவரும் பெற்றனர்.

33. உயிரியல் கனற்சிச் செயல்களுக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1937 இல் ஆல்பர்ட் செண்ட் கயார்கைவான் நாகிரோ போல்ட் பெற்றார்.

34. மூச்சு நுட்பம் பற்றி ஆராய்ந்தற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1938 இல் கார்னெய்லி ஜீன் பிராங்காய்ஸ் ஹேமன்ஸ் பெற்றார்.

35. புரோன்டிசாலின் நச்சுயிரி எதிர்ப்பு விளைவுகளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1939 இல் ஜெர்கார்டு டோமக் பெற்றார்.

36. லைட்டமின் K கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1943 இல் ஹென்றி கார்ல் பீட்டர் டேம் பெற்றார்.

37. வைட்டமின் K இன் வேதி இயல்பை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1943 இல் எட்வர்டு ஆடல்பெர்ட் டாய்சி பெற்றார்.

38. ஒற்றை நரம்பிழைகளின் வேறுபட்ட வேலைகளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
1944 இல் ஜோசப் எர்லாங்கர், ஹெர்பர்ட் ஸ்பென்சர்