பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127


1963 இல் சர் ஜான் கேரியு எக்ளஸ், சர் ஆலன் லாய்டு காட்கின், சர் ஆண்ட்ரு பீல்டிங் அக்சிலி ஆகிய மூவரும் பெற்றனர்.


62.கொலாஸ்டிரால், கொழுப்புக்காடி வளர்சிதை மாற்றம் ஆகியவற்றின் நுட்பத்தைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1964 இல் கோன்ராட் பிளாச், பியோடர் லைனன் ஆகிய இருவரும் பெற்றனர்.


63.நச்சுயுரித் தொகுப்பு, நொதியின் மரபுக் கட்டுப்பாடு ஆகியவை பற்றிக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1965 இல் பிராங்காய்ஸ் ஜேக்கப், ஆண்ட்ரி லோஃப், ஜேக்குயிஸ் மோனட் ஆகிய மூவரும் பெற்றனர்.


64.கட்டி தூண்டும் வைரசுகளைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

1966 இல் பேடன் ரோயஸ் பெற்றார்.


65.புராஸ்டேட் புற்றுநோய்க்கு வளர் தூண்டிப் பண்டுவம் செய்யலாம் என்னும் கண்டுபிடிப்பிற்கு நோபல் பரிசு பெற்றவர் யார்?

1966 இல் சிலியஸ் பெரன்டன் ஹகின்ஸ் பெற்றார்.


66.கண்பார்வைச் செயல்கள் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1967 இல் ரேங்கர் கிரானிட், ஹால்டன் கெபர் ஹார்ட்லைன், ஜார்ஜ் வால்டு ஆகிய மூவரும் பெற்றனர்.


67.புரதத் தொகுப்பில் மரபுத்தொகுதியின் பங்கு குறித்து விளக்கியதற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1968 இல் இராபர்ட் டபுள்யூ. ஹாலி, ஹரி கோவிந்து கொரோனா, மார்ஷல் டபுள்யூ நிரன்பர்க் ஆகிய மூவரும் பெற்றனர்.


68. நச்சுயிரிகள் மரபமைப்பு, பயன்பாட்டு நுட்பம் ஆகியவற்றை ஆராய்ந்து கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?