இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பொது விபத்துக்குட்பட்டவரை அல்லது நெருக்கடி நிலையில் உள்ளவரைக் கவனிப்பது.
12. சூழ்நிலை மருத்துவம் என்றால் என்ன?
- சூழ்நிலை மனிதனை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆராய்வது. இதில் நீர், பயணம், மாசாதல், மக்கள் தொகை வளர்ச்சி முதலியவை அடங்கும்.
13. ஆய்வு நிலை மருத்துவம் என்றால் என்ன?
- விலங்குகளை ஆய்வு செய்து நோய்களின் இயல்பை அறிதல்.
14. குடும்ப மருத்துவம் என்றால் என்ன?
- குடும்ப உறுப்பினர்களுக்குச் செய்யும் மருத்துவம். அதாவது, அந்தந்தப் பகுதியில் வாழ்பவர்களுக்குச் செய்வது.
15. தடயவியல் மருத்துவம் என்றால் என்ன?
- குற்றவியல் தொடர்பாக (கொலை, கொள்ளை) ஆராயும் துறை. அரசுத்துறை சார்ந்தது.
16.அணுவியல் மருத்துவம் என்றால் என்ன?
- நோய் அறிவதிலும் குணப்படுத்துவதிலும் கதிரியல் பொருள்களில் பயன்படுத்துவதை ஆராய்வது.
17. உளஉடல் மருத்துவம் என்றால் என்ன?
- உணர்ச்சி வாழ்க்கைக்கும் உடல் செயல்களுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்வது.
18. விளையாட்டு மருத்துவம் என்றால் என்ன?
- விளையாட்டின் பொழுது விளையாட்டினர்களுக்கு ஏற்படும் காயங்கள், அவற்றைக் குணப்படுத்தல் ஆகியவை பற்றி ஆராய்வது.
19. வெப்ப மண்டல மருத்துவம் என்றால் என்ன?
- மலோரியா முதலிய வெப்ப மண்டல நோய்களை ஆராயும் துறை.
20. கால்நடை மருத்துவம் என்றால் என்ன?
- விலங்குகளின் நோய்கள் அவற்றைக் குணப்படுத்துதல் ஆகியவற்றை ஆராயும் துறை.
21. தடுப்பு மருத்துவம் என்றால் என்ன?