பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130


84.இயங்கு மரபணுக்களைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

1983 இல் பார்பாரா கிளின்டாக் என்னும் அம்மையார் பெற்றார்.


85.தடுப்பாற்றல் வளர்ச்சிக் கொள்கைகள், எதிர்ப்புப் பொருள்கள் உற்பத்தி நெறிமுறை கண்டுபிடிப்பு ஆகியவற்றிற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1984 இல் நீல்ஸ் கே. ஜெர்னி, ஜார்ஜ் ஜே.எஃப் கோலர், சீசர் மில்ஸ்டையின் ஆகிய மூவரும் பெற்றனர்.


86.கொலஸ்டிரால் வளர்சிதைமாற்ற ஒழுங்கு கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1985 இல் மைக்கல் எஸ். பிரெளன், ஜோசப் கோல்டு ஸ்டெயின் ஆகிய இருவரும் பெற்றனர்.


87.வளர்ச்சி காரணிகளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1986 இல் ஸ்டேன்லி கோகன், ரீட்டா லெவி - மாண்டால் சினி ஆகிய இருவரும் பெற்றனர்.


88.எதிர்ப்புப் பொருள் வேற்றுமை உற்பத்திக்காக மரபணு நெறிமுறைக் கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு பெற்றவர் யார்?

1987 இல் சிசுமு டோனாகாவா பெற்றார்.


89.மருந்து செய்முறை நெறிமுறைகளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1988இல் சர் ஜேம்ஸ் டபுள்யு பிளாக், ஜெரூட்பி எலியன். ஜார்ஜ் எச் ஹிச்சிங்கல் ஆகிய மூவரும் பெற்றனர்.


90.கட்டி உண்டாக்கும் பிற்போக்கு நச்சுயிரிகளின் தோற்றம் பற்றிக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1989 இல் ஜே. மைக்கல் பிஷப், ஹெரோல்டு இ. வார்மஸ் ஆகிய இருவரும் பெற்றனர்.


91.மனித நோயைக் குணப்படுத்துவதில் உறுப்புப்பதியன் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?