பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131


1990 இல் ஜோசப் இ. முர்ரே, இ. டொனால் தாமஸ் ஆகிய இருவரும் பெற்றனர்.


92.கண்ணறைகளில் ஒற்றை அயனி வழிகளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1991 இல் எரிவின் நெதர், பெர்ட் சாக்மன் ஆகிய இருவரும் பெற்றனர்.


93.மீள்மாறு புரதப் பாசுவரவயமாக்கல் ஓர் உயிரியல் ஒழுங்கு என்பதைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1992 இல் எட்மண்ட் எச். பிஷர், எட்வின் ஜி. கிரப்ஸ் ஆகிய இருவரும் பெற்றனர்.


94.பிளவு மரபணுக்களைத் தனித்தனியாக கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1993 இல் ரிச்சர்டு ஜே. இராபர்ட், பிலிப் ஏ. ஷார்ப் ஆகிய இருவரும் பெற்றனர்.


95.ஜி-புரதங்களையும் அவற்றின் குறிப்பாட்டுச் சிறப்பையும் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1994 இல் ஆல்பிரட் ஜி. கில்மன், மார்டின் இராட்பெல் ஆகிய இருவரும் பெற்றனர்.


96.தொடக்க கருவளர்ச்சியில் மரபுக் கட்டுப்பாட்டுக் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1995 இல் எட்வர்டு பி. லூயிஸ், கிறிஸ்டியன் நஸ்லெயின் - வோல்கார்டு, எரிக் எஃப். வியஸ்காஸ் ஆகிய மூவரும் பெற்றனர்.


97.கண்ணறைச் சந்துவித்தல் உள்ள தடுப்பாற்றலைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1996 இல் பீட்டர் சி- டேகர்டி, ரோல்ஃப் எம். சிங்கர் நாகல் ஆகிய இருவரும் பெற்றனர்.


98.பிரியான்கள் என்பவைத் தொற்றுத் தடுப்புப் பொருள்கள். இவற்றைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

1997 இல் ஸ்டேன்லி பி. புருசினர் பெற்றார்.