1. நீரிழிவு நோயினர்
கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டியவை
1. நீரிழிவு நோய்க்கு உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, கட்டுப்பாடான உடல் எடை என்பவை மிக இன்றியமையாதவை.
2. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அரிசி உணவைத் தவிர்க்க வேண்டுவதில்லை.
3. எல்லாவகைத் தானிய உணவுகளையும் உட்கொள்ளலாம். எந்த உணவை உட் கொள்ள வேண்டும் என்பதை விட எவ்வளவு உட்கொள்ள வேண்டும் என்பதே மிக இன்றியமையாதது.
4. உணவின் அளவு அவரவர் வேலை செய்யும் முறையையும் உடல் எடையையும் பொறுத்தே அளவிடப்படுகிறது.
3. இனிப்பு உணவுகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.
6. நிலத்தின் அடியில் விளையும் கிழங்கு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
7. பச்சைக் கீரைகளையும் காய்கறிகளையும் அதிகம் உட்கொள்ள வேண்டும்.
8. பயறு வகைகளில் அதிகப் புரதச் சத்து உள்ளது. இதை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
9. கொழுப்புச் சத்து அதிகம் உள்ள, வெண்ணெய், நெய், தேங்காய் எண்ணெய், இறைச்சிக் கொழுப்பு முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும்.