16
10. வளர்ச்சி உட்கூறியல் என்ன?
அமைப்புக் கருவியல் ஆகும்.
11. முழு உட்கூறியல் என்றால் என்ன?
கண்ணால் பார்த்து அறியும் உறுப்புகளின் உள்ளமைப்பு.
12. நுண்ணோக்கு உட்கூறியல் என்றால் என்ன?
திசுவியல்.
13. நோய் உட்கூறியல் என்றால் என்ன?
நோயுற்ற திசுக்களின் உள்ளமைப்பை ஆராய்தல்.
14. கதிரியல் உட்கூறியல் என்றால் என்ன?
எக்ஸ் கதிர் படத்தில் தெரியும் திசுக்களை ஆராய்தல்.
15. சிறப்பு உட்கூறியல் என்ன?
குறிப்பிட்ட உறுப்புகள் அல்லது பகுதிகளின் உள்ளமைப்பை ஆராய்தல்.
16. தள உட்கூறியல் என்றால் என்ன?
பகுதிகள் சூழ்ந்துள்ளது தொடர்பாக அவற்றை ஆராயும் துறை.
17. கால்நடை உட்கூறியல் என்றால் என்ன?
வீட்டு விலங்குகளின் உள்ளமைப்பை ஆராய்தல்.
18. நரம்புநோய் இயல் என்றால் என்ன?
புறஞ்செல் நரம்பு மண்டல நோய்களை ஆராய்வது.
19. நரம்பு உடலியல் என்றால் என்ன?
நரம்பு மண்டல உடற் செயலை ஆராய்தல்.
20. நரம்பு-உளநோய் மருத்துவம் என்றால் என்ன?
நரம்பியல் உளநோய் மருத்துவம் இரண்டும் சேர்ந்தது.
21. நரம்பு அறிவியல் என்றால் என்ன?
நரம்பு மண்டல மருந்தியல், உயிர் வேதி இயல், உடலியல், உட்கூறியல், கருவியல் ஆகிய நிலைகளை ஆராய்தல்.
22. நரம்பு - கண்ணியல் என்றால் என்ன?
கண்தொடர்பான நரம்பு மண்டலம் பற்றி ஆராயுந் துறை.