பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17



23. மகளிர்நோய் இயல் என்றால் என்ன?

பெண்கள் பிறப்பு வழியில் உண்டாகும் நோய்களை ஆராயுந்துறை.

24. குழந்தை மருத்துவம் என்றால் என்ன?

குழந்தையின் வளர்ச்சி, பாதுகாப்பு, குழந்தை நோய், அந்நோயைப் போக்குதல் ஆகியவற்றை ஆராயுந்துறை.

25. மூப்பியல் என்றால் என்ன?

மூப்புச் சிக்கல்கள், மூப்பு நோய்கள் பற்றி ஆராய்வது.

26. பதிய அறிவியல் என்றால் என்ன?

உடல் உறுப்புகளை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றிப் பொருத்துதலை ஆராயும் புதிய துறை.

27. கருவியல் என்றால் என்ன?

கருநிலையில் தனி உயிர் வளர்ச்சி பற்றிப் பல நிலைகளில் ஆராயுந்துறை.

28. மருந்தியல் என்றால் என்ன?

மருந்துகளின் இயைபு, உற்பத்தி, பயன்கள் முதலியவை பற்றி ஆராயுந்துறை.

29. உளநோய் மருத்துவம் என்றால் என்ன?

உளநோய்கள் தடுப்பு குணப்படுத்தல் முதலியவை பற்றி ஆராய்வது.

30. உணர்வகற்றியல் என்றால் என்ன?

உணர்வகற்றல், உணர்வகற்றிகள் ஆகியவை பற்றி ஆராய்வது.


3. வள்ளுவரும் மருத்துவமும்

1. திருவள்ளுவர் மருத்துவத்தை எவ்வாறு சிறப்பிக்கின்றார்?

மருந்து என்னும் அதிகாரத்தில் 10 குறள்களில் மருத்துவத்தின் அடிப்படைகளைக் கூறுகிறார்.

2. மருத்துவ நூலோர் கூறும் மூன்று யாவை?

வாதம், பித்தம், சிலேத்துமம்.

3. நோய் எப்பொழுது உண்டாகிறது?

ம.2.