23
மருந்தும் சித்தர் நூல்களில் குறிப்பிடப்படுகின்றன.
19. சித்த மருத்துவத்தில் கூறப்படுகின்ற மூன்று யாவை?
மணி, மந்திரம், மருந்து. இவற்றில் மணி என்பது சோதிடத்தைக் குறிக்கும்.
20. போகர் என்பவர் யார்?
சீனத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர். 18 சித்தர்களில் ஒருவராகக் கருதப்படுபவர். இவர்தம் மருத்துவ முறைகள் போகர் எழுநூறு, போகர் இரத்தின வைப்பு முதலியவை இவர் பெயரில் வழங்குபவை.
21. ஆயுர் வேத மருத்துவம் என்றால் என்ன?
வேத உறுப்புகளில் ஆயுள் வேதமும் ஒன்று. ஆயுள்வேத மருத்துவம் இதன் பகுதியாகும்.
22. ஆயுர் வேத மருத்துவம் என்னும் வழக்காறு எவ்வாறு உண்டாயிற்று?
ஓஷதம் என்னும் சொல் ஔஷதம் என்றாயிற்று. ஓஷதம் என்றால் ஒருமுறை பூத்துக் காய்த்து அழியும் பூண்டுகளையே குறிக்கும். ஒளஷதம் ஔடதம் என்றும் ஓஷம் ஓடதம் என்றும் தமிழில் வழங்கலாயின. ஆகவே, ஔஷதம் என்னும் பெயரே பெரும்பாலும் மூலிகை வகைகள் செய்யப்படும் மருத்துவமே ஆயுர்வேத மருத்துவம் எனவாயிற்று.
23. ஆயுர் வேத வைத்திய முதல் நூல் எது?
ஐத்ரேய சம்கிதை என்னும் நூலாகும். இதை எழுதியவர் ஐத்ரேயர்.
24. இதில் கூறப்படாதவை எவை?
இதில் உப்பு, உலோகவகை, இரசபாஷணங்கள் ஆகியவை பற்றிய குறிப்பில்லை.
25. ஆயுர் வேத மருத்துவத்தின் சிறப்பியல்புகள் யாவை?
1. நோயாளியைத் தொடுதல், பார்த்தல், விசாரித்தல் மூலம் நோய் அறியப்படுகிறது.
2. புல், பூண்டு, மூலிகை வகைகளை மருந்தாக ஆயுர் வேதம் பயன்படுத்துகிறது.
3. ரிக் வேதத்தில் நீரைப் பற்றியும் மூலிகைகளைப்-