26
அண்ணா மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம் சென்னை - 600 106.
44. அறிஞர் அண்ணா மூலிகைப் பண்ணை எங்குள்ளது?
சென்னை அரும்பாக்கத்தில் மருத்துவ மனைக்கு எதிரிலுள்ளது.
45. சித்த மருத்துவ இதழ்கள் யாவை?
1. சித்த மருத்துவம் | 2. சித்தர் உலகம் |
3. அமிழ்தம் | 4. மூலிகை மணி |
46. சாமி சிதம்பரனார் எழுதிய சித்த அறிவியல் நூல் எது?
சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம்.
47. சித்த மருத்துவத்தை இன்றும் வாழ வைத்துக் கொண்டிருப் பலர் யார்?
பரம்பரை வைத்தியர்களான சித்த மருத்துவர்களே. இவர்களுக்கு அடுத்ததாகத் தமிழக அரசும் சித்த மருத்துவ வளர்ச்சிக்கு உதவுகிறது. சித்த மருத்துவ கல்லூரிகள் அமைத்துள்ளது; சித்த மருத்துவ மனையும் நிறுவியுள்ளது. மறைந்த மாணிக்கம் காஞ்சி சிற்சபை சிறந்த சித்த மருத்துவர். அண்ணாவால் போற்றப் பெற்றவர்.
5. சர்காவும் சிஸ்ருதாவும்
1. சரகாவின் சிறப்பென்ன?
இவர் சிறந்த ஆயுர் வேத மருத்துவர். கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவராக இருக்கலாம். செரித்தல், வளர்சிதை மாற்றம், தடுப்பாற்றல் ஆகியவை பற்றிய கருத்துகளை முதன் முதலில் கூறியவர். மரபியலின் அடிப்படைகள் தெரிந்தவர். மனித உடற்கூறையும் நன்கறிந்தவர். அவர் கணக்குப்படி நம் உடலிலுள்ள எலும்புகள் 360. இவற்றில் பற்களும் சேரும். தற்கால மருத்துவ இயல் கணக்கு 206. அவர் எழுதிய சிறந்த மருத்துவ நூல் சரகாசமிதா.