28
புக வேண்டும். அப்பொழுதுதான் அவர் நோய்களைக் குணப்படுத்த இயலும். முதலில் அவர் எல்லாக் காரணங்களையும் அறிய வேண்டும். இவற்றில் சூழ்நிலையும் அடங்கும். இக்காரணிகள் நோய்க்குக் காரணமானவை. இவற்றை அறிந்த பின்னரே என்ன மருத்துவம் என்பதைக் கூறவேண்டும். இவை போன்ற பல குறிப்புகள் இந்நூலில் காணப்படுகின்றன. அவற்றில் சில உடலியல், கருவியல், ஏதுவியல் முதலிய துறைகளைச் சார்ந்தவை.
7.சுஸ்ருதா யார்? அவர் பங்களிப்பின் சிறப்பென்ன?
கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த இந்திய அறிஞர். அவர் எழுதிய மருத்துவ நூல் சுஸ்ருதசமிதா. தவிரச் சிசேரியன் அறுவை பற்றி முதலில் கூறியவர் இவரே. இவர் உணர்வகற்றியலின் தந்தையும் ஆவார்.பல நுண்ணிய அறுவைக் கருவிகளையும் அவர் பயன்படுத்தினார்.
8.சுஸ்ருதா யார் வழித்தோன்றல்?
வேத விற்பன்னர் விஸ்வாமித்திரரின் வழித்தோன்றல்.
9.அவர் யாரிடம் மருத்துவக் கல்வி கற்றார்?
வாரனாசியில் திவோதாசா தனவந்திரியின் குடிலில் அறுவையும் மருத்துவமும் கற்றார். பின் இவர் அறுவையிலும் மருத்துவத்தின் பிற துறைகளையும் சிறந்து விளங்கினார்.
10.சுஸ்ருதா அறிந்த அறுவைக் கருவிகள் எத்தனை?
101 கருவிகள். அவர் பயன்படுத்திய முதலைச் கவ்வுச் சாமணமும் கழுகு மூக்குச் சாமணமும் இன்றும் பயன்படுகின்றன.
11.சுஸ்ருதா தம் மாணவர்களுக்குக் கூறிய அறிவுரை யாது?
மிகச் சிறந்த ஆசிரியர் சிஸ்ருதா. அறிமுறை, செய்முறை ஆகிய இரண்டையும் அறிந்தால்தான் ஒருவர் சிறந்த மருத்துவர் ஆக முடியும் என்று தம் மாணவர்களுக்குக் கூறினார். அறுவை செய்யத் தொடங்குமுன், அப் பயிற்சிக்கு மாதிரிகளையும் இறந்த விலங்கின் உடல்களையும் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.