30
நீரைப் பயன்படுத்தி நோய்களைக் குணப்படுத்துதல்.
3. ஊசிகுத்துப் பண்டுவம் என்றால் என்ன?
ஊசிகள் மூலம் தோலில் குறிப்பிட்ட இடங்களில் குத்தி, நோய் நீக்கும் சீன மருத்துவ முறை.
4.வலிப்பு மின் பண்டுவம் என்றால் என்ன?
உளத்தாழ்ச்சி உள்ளவர்க்கு மின்சாரம் மூலம் பண்டுவம் அளித்தல்.
5. வேதிப்பண்டுவம் என்றால் என்ன?
மருந்துகள் மூலம் நோய்களைக் குணப்படுத்தல்.
6. கதிர்ப்பண்டுவம் என்றால் என்ன?
நோய்களைப் புறஊதாக் கதிர்கள், அகச்சிவப்புக் கதிர்கள் ஆகியவை மூலம் குணப்படுத்தல்.
7. கதிரியக்கப் பண்டுவம் என்றால் என்ன?
ரேடியம், எக்ஸ் கதிர்கள் அல்லது கதிரியக்கப் பொருள்கள் மூலம் நோயைக் குணப்படுத்தல்.
8. கதிரியல் பண்டுவம் என்றால் என்ன?
எக்ஸ்.கதிர் முதலியவை அடங்கிய கதிர்வீச்சினால் நோய் நீக்க மருத்துவத்தில் பயன்படும் முறை.
9. குயூரி பண்டுவம் என்றால் என்ன?
ரேடியக் கதிர்வீச்சு மூலம் நோயைக் குணப்படுத்தல்.
10. உளப்பண்டுவம் என்றால் என்ன? உளக்கோளாறுகளையும் நோய்களையும் போக்கும் முறை.
11. ஒட்டு அறுவை என்றால் என்ன?
அறுவை முறை மூலம் சிதைந்த திசுவை அதன் இயல்பான நிலைக்கும் தோற்றத்திற்கும் கொண்டு வருதல்.
12. பிண அறுவை என்றால் என்ன?
இறந்த உடலைத் திறந்து ஆய்ந்து பார்த்தல்.
13. கில்லியன் அறுவை என்றால் என்ன?
மண்டைக்குழி சீழை நீக்க நடைபெறுவது. இதில் பொட்டெலும்பின் ஒரு பகுதி நீக்கப்பட்டுச் சீழ் முழுவதுமாக வடிக்கப்படும்.