33
நரம்பு. இதில் உணர் இழைகளும் செய்தி இழைகளும் உண்டு.
32. சிறுநீரகக்கல் நீக்கல் என்றால் என்ன?
சிறுநீரகங்களின் உள்ளே இருக்கும் கற்படிவை அறுவை மூலம் எடுத்தல்.
33. கதிரியல் அறுவை என்றால் என்ன?
புதிய அறுவை நுணுக்கம். இதில் காமா கதிர்கள் பயன் படுகின்றன. மூளை அறுவையில் பயன்படுவது.
7. சில அடிப்படைகள்
1. ஒற்றடங்கொடுத்தல் என்றால் என்ன?
விக்கத்திற்குத் துணியை வெந்நீரில் நனைத்து ஒத்துதல்.
2. ஆவிபிடித்தல் என்றால் என்ன?
வாய் அல்லது மூக்கின் வழியாக ஆவியை உள்ளிழுத்தல். தொண்டை மற்றும் மார்புக் கோளாறுகளுக்குக் குணம் ஏற்படச் செய்வது. இதைச் செய்யுங் கருவி ஆவிபிடிப்பி. இதில் மருந்தும் வெந்நீரும் சேர்க்கப்படும்.
3. புகையூட்டல் என்றால் என்ன?
தொற்றுநீக்கு ஆவியைச் செலுத்தி அறைகளிலுள்ள நுண்ணுயிர்களை அழித்தல்.
4. உப்புநீர் என்றால் என்ன?
உப்பும் நீரும் சேர்ந்தது. உடலியல் உப்பு நீர் 9% செறிவுள்ளது. இதன் ஊடுபரவும் அழுத்தம் குருதியின் ஊடுபரவும் அழுத்தம் போன்றதே (சமம்). நரம்பு வழியாகக் குருதியில் செலுத்தப்படுவது.
5. பெனிடிக்ட் கரைசலின் பயன் யாது?
சிறுநீரில் சர்க்கரை உள்ளதா என்பதைப் பார்க்கப் பயன்படுவது.
6. பிஎச் என்றால் என்ன?
கரைசல்களின் அய்டிரஜன் அயனிச் செறிவைக் காட்டும் அளவு. இதைக் கொண்டு அது காடித்தன்மை