34
உள்ளதா காரத்தன்மை உள்ளதா என்பதை அறியலாம். 7க்குக் கீழுள்ள அளவு காடித்தன்மையையும், 7க்கு மேலுள்ள அளவு காரத்தன்மையையும் குறிக்கும்.
7. தாங்குகரைசல்களின் மருத்துவப் பயன் யாது?
பிஎச் மதிப்பை நிலைநிறுத்தும் ஊசி மருந்துகள் செய்ய.
8. மருந்து எழுதுதல் என்றால் என்ன?
மருந்துக் கடைகளுக்கு மருத்துவர் எழுதும் விதி முறை. இதில் தலைப்பு R என்று இருக்கும். இதற்குப் பொருள் எடுக்க வேண்டியது. மருந்துகளின் பெயர்கள், அளவு, உண்ண வேண்டிய முறை இருக்கும். மருத்துவரின் கையெழுத்தும் நாளும் இருக்கும்.
9. வேளை அளவு என்றால் என்ன?
மருத்துவர் தரும் மருந்துகளை ஒரு வேளைக்குக் குறித்துள்ளபடி சாப்பிடுதல்.
10. விதிமுறை என்றால் என்ன?
ஒரு மருந்தைச் செய்வதற்குரிய வழிவகை.
11. ஊசி போடுதல் என்றால் என்ன?
ஊசிமூலம் மருந்துகளை உடலினுள் செலுத்தல். உடன் பயன் தெரியும்.
12. தடுப்பூசி போடுதல் என்றால் என்ன?
திசுவில் நுண்ணுயிர்களை ஆவைன்களாகச் செலுத்துதல். காலரா தடுப்பூசி.
13. அலகிடுதல் என்றால் என்ன?
மின்னணுக் கதிர்கள் கொண்டு உடல் உறுப்புகளை ஆராய்தல். மருத்துவத்தில் முன்னேறிய முறை.
14. எக்ஸ் கதிர்களை யார் எப்பொழுது கண்டுபிடித்தார்?
1895இல் இராண்ட்ஜன் என்பவர் கண்டுபிடித்தார்.
15. இவற்றின் இயல்புகள் யாவை?
குறுகிய அலை நீளமுடையது. எலும்பு தவிர மற்ற எல்லாப் பொருள்களிலும் ஊடுருவுவது.
16. இவற்றின் பயன்கள் யாவை?
உடலின் எல்லாப் பகுதிகளையும் ஆராய்ந்து பர்க்க