36
உடல் சூட்டின் அளவு. பாகையில் தெரிவிக்கப்படுவது. நம் உடலின் இயல்பான வெப்பநிலை 37° செ. நோயாளி அறையின் சராசரி வெப்ப நிலை 16-18° செ.
27. உள்பார்வை வில்லை (ஐஓல்) என்றால் என்ன?
தொடுகண் வில்லை போன்றது. பிளாஸ்டிக்காலான மெல்லிய வட்டு, கண்புரையினால் விழிவில்லை நீக்கப்பட்டவருக்குப் பொருத்தப்படுவது.
28. அனைத்து அல்லது இல்லை விதி என்றால் என்ன?
திசுக்களின் உறுத்துணர்ச்சி பற்றிய உடலியல் விதி. எ-டு. நரம்புகள். இவ்விதியில் இரண்டு வினைகளே ஒரு தூண்டுதலுக்கு உள்ளன. ஒன்று வினை இல்லை. மற்றொன்று முழுத் தூண்டல்.
29. ஆட்லர் கொள்கை யாது?
தாழ்வு மனப்பான்மையை ஈடுகட்ட மக்கள் நரம்புக்கோளாறுகளை உண்டாக்குகிறார்கள்.
30. கண்காணித்தல் என்றால் என்ன?
தானியங்கு முறையில் நோயாளியின் குருதி அழுத்தம், வெப்பநிலை, துடிப்பு, மூச்சு முதலியவற்றைப் பதிவு செய்தல்.
31. முன்கணிப்பு என்றால் என்ன?
ஒரு நோய் நிலை அல்லது போக்கு பற்றி கொள்ளும் கருத்து.
32. நஞ்சு என்றால் என்ன?
நச்சுத் தன்மையை உண்டாக்கும் பொருள்; உயிருக்கு ஊறு தருவது. எ-டு. சயனைடு.
33. உணவு நஞ்சு என்றால் என்ன?
தொற்றுள்ள உணவை உட்கொள்வதால் வாந்தி, கழிச்சல் முதலியவை ஏற்படுதல். நுண்ணுயிரிகளின் நஞ்சு உணவில் கலந்திருப்பதே இந்நிலைக்குக் காரணம்.
34. புரைவழி என்றால் என்ன?
இரு படல் பரப்புகளுக்கு இடையே அமைந்தள்ள இயல்பு நீங்கிய வழி, எ-டு, குதப்புரைவழி.
35. தேக்கம் என்றால் என்ன?