52
ஈரிதழ்த்திறப்பி, இட மேலறைக்கும் இட கீழறைக்கும் நடுவே அமைந்து, கீழறைக்குக் குருதியைச் செலுத்துவது. கீழறை சுருங்கும் பொழுது இது மூடிக்கொள்ளும். குருதி பெருந்தமனிக்குச் செல்லும்.
17. மூலிதழ்த் திறப்பி என்றால் என்ன?
இதய வல மேலறைக்கும் கீழறைக்கும் இடையிலுள்ளது. வலமேலறையிலிருந்து கீழறைக்குக் குருதி செல்லுமாறு செய்யும். கீழறை சுருங்கும் பொழுது நுரையீரல் தமனிக்குச் செல்லும்.
18. கருவில் இதயம் எப்பொழுது, எவ்வாறு தோன்றுகிறது?
கரு உருவான மூன்றாம் வாரத்தில் இதயம் சிறிய குழல் போன்று தோன்றுகிறது. கருவில் இதயம் எப்பொழுது துடிக்கத் தொடங்குகிறது. கருவிற்கு ஐந்துவாரம் ஆகும்பொழுது இதயம் துடிக்கத்துவங்கும்.
20. இதயச் செயல்பாட்டுத்திறக் காரணிகள் யாவை?
1. முன் சுமை
2. பின் சுமை
3. சுருங்குதிறன்
4. இதயத் துடிப்பளவு.
21. இதயச்சுருக்கம் என்றால் என்ன?
இதயச் சுழற்சியின் சுருங்கு நிலை. இது இதயக் கீழறைகள் சுருங்குவதையே குறக்கும்.
22. சுருங்கு குருதியழுத்தம் என்றால் என்ன?
எவ்விசையுடன் இடக்கீழறை சுருங்குகிறதோ அவ்விசை வெளிப்புறத் தமனிகளுக்குச் செல்லுதல்.
23. சுருங்கு முணுமுணுப்பு என்றால் என்ன?
இதயம் சுருங்கும் பொழுது கேட்கப்படும் இரைச்சல். இரு பெருந்தமனிகள் அடைப்பாலும் அல்லது மூவிதழ் திறப்பு அடைப்பாலும் உண்டாவது.
24. இதய விரிவு என்றால் என்ன?
இதயச் சுழற்சியின் ஒரு பகுதி. இதில் இதயக் கீழறைகளில் குருதி நிரம்பும்.