பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59


1967 டிசம்பர் 3இல் இவர் மனிதனுக்கு முதன்முதலில் மாற்று இதயத்தை அறுவை மூலம் பொருத்தினார். அறுவை நடந்த இடம் தென்ஆப்பிரிக்காவில் கேப்டவுன், குருட்சர் மருத்துவமனை.

77. இது எப்படி நிகழ்த்தப்பட்டது?

50 வயதுள்ள லூயிஸ் வாஸ்கன்சி என்பார் நோய்வாய்ப் பட்ட இதயத்தை அகற்றிவிட்டுச் சாலைவிபத்தில் மூளைஇறப்பு ஏற்பட்டு இறப்பை நெருங்கிக் கொண்டிருந்த 25 வயது இளைஞன் டேனிஸ் ஆன்டார்வல் என்பவனின் இதயத்தைப் பொருத்தினார். நோயாளி 28 ஆண்டுகள் உயிரோடு இருந்தார்.

78. அமெரிக்காவில் எப்பொழுது மாற்று அறுவை நடந்தது?

1968 ஜனவரி மற்றும் மே மாதத்தில் நடந்தது. ஜனவரியில் சியாம்வே என்பவரும் மே மாதத்தில் கூலி என்பவரும் மாற்று இதயத்தைப் பொருத்தினர்.

79. இந்தியாவில் முதன்முதலில் மாற்று இதய அறுவை செய்தவர் யார்?

இந்தியப் புதுத்தில்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் மருத்துவர் வேணுகோபால் 1994 ஆகஸ்ட் 3இல் முதன்முதலில் மாற்று இதய அறுவையை வெற்றிதரும் வகையில் செய்தார்.

80. இயல்பு (நோய்) இதயம் எவ்வாறு அகற்றப்படுகிறது?

இதயம் வழங்குபவரின் நடுமார்பு கீறப்பட்டு இதயம் உரிய முறையில் எடுக்கப்படும்.

81. மாற்று இதயம் எவ்வாறு பொருத்தப்படுகிறது?

மாற்று இதயம் பெறுபவரின் மார்புக் கூட்டின் நடு எலும்பு நீக்கித் திறக்கப்படும். பெருந்தமனியும் நுரையீரல் தமனியும் இறுக்கியால் மூடப்படும். இதயமேலறைகள் வெட்டப்பட்டு நோயுற்ற இதயம் அகற்றப்படும். அந்த இடத்தில் மாற்று இதயம் வைக்கப்பட்டு மேலறைகள் பொருத்தப்படும். நுரையீரல் தமனி நேரடியாக இணைக்கப்படும். பின் இதய அறைகளிலிருந்து காற்று வெளியேற்றப்பட்டுப்-