இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
61
- உரிய முறையில் பெறப்படுகிறது. 15 - 35 வயதுள்ள ஆண்களிடமும், 15 - 40 வயதுள்ள பெண்களிடமும் இவ்விதயம் பெறப்படுகிறது.
87. அகற்றப்பட்ட இதயம் எதில் வைக்கப்படுகிறது?
- 40செ. குளிர்நிலையில் உப்புநீரில் நான்கு மணிநேரம் வைக்கப்படும்.
4. செயற்கை இதயம்
88. செயற்கை இதயத்தை யார் எப்பொழுது புனைந்தார்?
- 1983இல் அமெரிக்க ஹூஸ்டன் மருத்துவமனையைச் சார்ந்த டாக்டர் இராபர்ட் கே. ஜார்விக் என்பார் புனைந்தார். இதற்கு ஜார்விக்-7 என்று பெயர். இவர் இதை முதலில் ஆடு, மாடு, குரங்கு முயல் போன்ற விலங்குகளுக்கு ஆய்வுநிலையில் பொருத்தி வெற்றியடைந்தார். இது நெல்லிக்காய் அளவில் இருந்தது.
89. செயற்கை இதயம் எவ்வாறு இயங்குகிறது?
- இது நோயாளியின் மார்புக்குள் பொருத்தப்படும். கீழ்ப்பெருஞ்சிரை மேற்பெருஞ்சிரை, நுரையீரல்தமனி ஆகியவை மின்உந்தியின் வலப்பக்கப் பையோடு இணைக்கப்படும். நுரையீரல் சிரைகளும் பெருந்தமனியும் இடப்பக்கப் பையோடு சேர்க்கப்படும். உந்தி இயங்கும்பொழுது அதனுள் இருக்கும் வட்ட வடிவத் தகடு ஒன்று முதலில் வலப்பக்கப் பையைச் சுருங்கச் செய்யும். இதனால் அங்கிருந்து குருதி நுரையீரல்களுக்குச் செல்லும். பின், அத்தகடு இடப்பக்கப் பையைச் சுருங்கச் செய்யும். இப்பொழுது அங்குள்ள குருதி பெருந்தமனிக்குள் செல்லும். பின் உடலின் பல பகுதிகளுக்கும் செல்லும். இவ்வாறு இயற்கை இதயத்தைப் போலவே இது இயங்கும்.
90. செயற்கை இதயம் எத்தனை வடிவங்களில் உள்ளது?
- ஐந்து வடிவங்களில் உள்ளது.
91. இந்த இதயத்தால் ஒருவர் எத்தனை ஆண்டு வாழ் இயலும்?