பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65


மயக்கம் இருக்கும்.
6. சிறுநீர் பிரியாது.

110. இதய அழற்சி என்றால் என்ன?

இதயத் தசை வீங்குதல்.

111. இதய வெளியுறை அழற்சி என்றால் என்ன?

இதய வெளியுறை வீங்குதல்.

112. இதய உள்ளுறை அழற்சி என்றால் என்ன?

இதய உள்ளுறை வீங்குதல்.

113. நெஞ்செரிச்சல் என்றால் என்ன?

தொண்டைக்கு அடியில் எரியும் உணர்வு இருத்தல். இரைப்பையில் காடி எதிர்க்களித்தலால் இது உண்டாவது.

114. இதய மீச்சோர்வு என்றால் என்ன?

பெரும் வெப்பத்தினால் உண்டாவது. இப்பொழுது விரைந்த நாடித்துடிப்பு, வயிற்றில் பிடிப்பு, மூச்சுத் திணறல் ஆகியவை இருக்கும். அதிகம் வியர்ப்பதாலும் சோடியம் குளோரைடு இழப்பாலும் இவை ஏற்படும்.

115. இதயத்தசை நசிவு என்றால் என்ன?

குருதி வழங்கல், இதயத்தசை உறைப் பகுதிக்கு கடுமையாகக் குறைதல், தமனி அடைப்பு, திராம்பின் உண்டாதல் முதலிய காரணிகளால் இந்நிலை ஏற்பட்டுத் தசையுறை அணுக்கள் இறப்பதால், இறப்புப் பகுதி தோன்றும்.

116. இதயத் தசைச் சோகை என்றால் என்ன?

குருதிக்குழாய்ச் சுருக்கத்தினால் தசை உறையின் ஒரு பகுதிக்குக் குருதி செல்வதில் குறைவு உண்டாதல்.

117. இதய அடைப்பு (heart block) என்றால் என்ன?

இதயத் துண்டலில் உண்டாகும் கடத்தல் பழுதுபடுதல். இது இதய இட வலஅறை அடைப்பையே குறிக்கும்.

118. குருதிச்சோகை என்றால் என்ன?

குருதியில் இரும்புச்சத்து குறைவால் ஏற்படும் நோய் நிலைமை. முகம் வெளிறிய நிலை, சோர்வு ஆகியவை இதன் அறிகுறிகள்.

119. குருதி உறையாமை என்றால் என்ன?
ம.5.