இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
66
- குருதிக்குழாய் சிறிது பழுது பட்டாலும் குருதி மிகுதியாக வெளியேறும். இது மரபு வழிச் சார்ந்தது. ஆண்களிடம் காணப்படும் பால் தொடர்பு நோய்.
120. குருதி நீரிழிவு என்றால் என்ன?
- சிறுநீரில் குருதி வெளிப்படல்.
121. குருதிக் குழாய் அடைப்பின் தீமைகள் யாவை?
- இந்த அடைப்பு மூளைக் குருதிக் குழாயில் ஏற்பட்டால் பக்க வாதம் உண்டாகும். கைகளின் குருதிக் குழாய் ஏற்பட்டால் அழுகல் நோய் உண்டாகும்.
122. இதயத்தளர்ச்சி (heart failure) என்றால் என்ன?
- உடல் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் போதிய குருதியை இதயம் அளிக்காத நிலை. இது இதய இட, வலக் கீழறைகளைப் பாதிக்கும்.
123. இதயத்தளர்ச்சியின் இரு வகைகள் யாவை?
- 1. கடும் இதயத் தளர்ச்சி
- 2. நாட்பட்ட இதயத் தளர்ச்சி
- 1. கடும் இதயத் தளர்ச்சி
124. இதய வலிக்குக் (angina) காரணம் என்ன?
- இதயத் திசுக்களுக்குக் குருதி கொண்டு செல்லும் இதயத் தமனிகளில் கொழுப்பு படிந்து அவற்றைச் சுருங்கச் செய்யாது.
125. இதய வலிக்கு முதல்உதவி என்ன?
- மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் நைட்ரேட் மருந்துகள் ஒன்றை உட்கொள்ளச் செய்தல். கிளிசரல் நைட்ரேட்.
126. இதய வலிக்குரிய பண்டுவ முறைகள் யாவை?
- 1. மாற்றுவழி அறுவை
- 2. இதயத்தமனிச் சீரமைப்பு
- 3. லேசர் ஒளி அளித்தல்
- 1. மாற்றுவழி அறுவை
127. இதய வலியைத் தடுக்கும் முறைகள் யாவை?
- 1. புகைபிடிக்காதிருத்தல்
- 2. உடல் எடையை வயதிற்கும் உயரத்திற்கும் தகுந்தவாறு பேணுதல்.
- 3. உடற்பயிற்சி செய்தல்.
- 1. புகைபிடிக்காதிருத்தல்