72
பெட்ரோலியம் உண்டாகவும் இவை காரணமாக உள்ளன.
13.நச்சியம் என்றால் என்ன?
இது ஒர் அலி உயிரி. உயிருள்ளதா உயிரற்றதா என்று உறுதி செய்ய இயலாது. இது வாழக் கட்டாயம் ஒம்புயிர் தேவை. மீநுண்ணோக்கி மூலமே காணலாம். நோயை மட்டுமே உண்டாக்குவது.
14.நச்சியம் உண்டாக்கும் நோய்கள் யாவை?
அம்மைநோய், அக்கி, மஞ்சள்காய்ச்சல், நீர்க்கொள்ளல் முதலியவை.
15.நச்சியஇயல் என்றால் என்ன?
நச்சுயிர்களான நச்சியங்களை ஆராயுந்துறை.
16.நச்சிய அழற்சி என்றால் என்ன?
நச்சியத்தினால் உண்டாகும் நோய்.
17.நச்சியத்தைக் கண்டறிந்தவர் யார்?
1892இல் உருசியத் தாவரவியலார் இவனோசுகி என்பார் இதைக் கண்டறிந்தார்.
18.நச்சியத்தின் அமைப்பைக் கூறு.
ஒரு வகை உட்கரு காடி மட்டுமே உண்டு. டிஎன்ஏ அல்லது ஆர்என்ஏ. குறிப்பிடத்தக்க இனப் பெருக்கம் இல்லை. தன்பகுதிகளைத் தொகுக்கும் ஆற்றல் உள்ளது. இதைப் படிகமாக்கலாம்.
19.விப்ரியோ என்றால் என்ன?
இவை காற்புள்ளி வடிவக் குச்சி வடிவ உயிர்கள். கிராம் எதிரிடையானவை. இயங்கக் கூடியவை. மண், நீர், இறந்த பொருள் ஆகியவற்றில் பரவியுள்ளவை. விப்ரியோ காலரே என்னும் நுண்ணுயிரி காலரா நோயை உண்டாக்குவது.
20.பூஞ்சை என்றால் என்ன?
தண்டுடைத் தாவரங்களின் ஒரு பிரிவு.
21.இதில் அடங்குவன யாவை?
பூஞ்சணம், காளான், ஈஸ்டு.
22.பூஞ்சையின் சிறப்பென்ன?