73
புரதங்களும் வைட்டமின்களும் அடங்கியது. ரொட்டி செய்தலிலும் குடிமம் வடிப்பதிலும் பயன்படுதல். பெனிசிலின் பூஞ்சையிலிருந்தே செய்யப்படுகிறது. சில பூஞ்சைகள் நோய்களையும் உண்டாக்குபவை.
23.கிராம் கறை எத்தனை வகைப்படும்?
இரு வகைப்படும்.
24.கிராம் நேர் நுண்ணுயிரி என்றால் என்ன?
செந்நிற எதிர்க்கறையாலும், நிறம் நீக்கியாலும் பாதிக்கப்படாமல் ஊதாநிறக் கறையை நிலைக்க வைத்திருக்கும் குச்சி வடிவ உயிரி. எ-டு. ஸ்டேபிலோ காக்கை.
25.கிராம் எதிர் நுண்ணுயிரி என்றால் என்ன?
கிராம் கறையோடு சேர்க்கும் பொழுது எதிர்க்கறையோடு சேர்ந்து நிறமற்றதாக்கும். எ-டு. சால்மனல்லா.
12. சில நோயியங்கள்
1.ஆல்பிரைட் நோயியம் என்றால் என்ன?
எலும்பு நார் பிறழ்வளர்ச்சி, தோல் நிறமாதல், பெண்களிடம் பால் உணர்வு முன்னரே ஏற்படுதல்.
2.ஆல்போர்ட் நோயியம் என்றால் என்ன?
ஒரு பரம்பரைக் கோளாறு. நரம்புச் செவிடு, நரம்பழற்சி முதலியவை இருக்கும்.
3.போராவி நோயியம் என்றால் என்ன?
உணவுக்குழாய் தானாகவே தெறித்தல்.
4.பிரவுன் செக்குவார்டு நோயியம் என்றால் என்ன?
ஒரு பக்கவாத நோய். மூட்டு இயக்க உணர்ச்சி இராது. வலியுணர்ச்சியும் வெப்ப உணர்ச்சியும் இரா.
5.காஃபே நோயியம் என்றால் என்ன?
இளம்பிள்ளை மூளைப் புறணி வளர்ச்சி அதிகமிருக்கும்.
6.கார்பண்டர் நோயியம் என்றால் என்ன?
ஒரு பரம்பரைக் கோளாறு. தற்புரி ஒடுக்கப் பண்பினால்