74
ஏற்படுவது. மிகை விரல் வளர்ச்சி, முகவளர்ச்சி, உடல் பருமன் முதலியவை இருக்கும்.
7.டவுன் நோயியம் என்றால் என்ன?
மங்கோலிய இனப்பண்புகள் இருக்கும். குட்டை விரல்கள், உளக்குலைவு முதலியவை இருக்கும்.
8.எய்சன்மங்கர் நோயியம் என்றால் என்ன?
இதயக் கீழறைத் தடுப்புக்குறை. நுரையீரல் மிகை அழுத்தமும் நீலம் பூத்தலும் இருக்கும்.
9.பேபர் நோயியம் என்றால் என்ன?
ஒரு வகைக் குருதிச்சோகை.
10.பார்பர் நோயியம் என்றால் என்ன?
கொழுப்பு மிகைக் கோளாறு.
11.பெட்டி நோயியம் என்றால் என்ன?
நாட்பட்ட மூட்டழற்சி.
12.கேன்சரின் நோயியம் என்றால் என்ன?
இல்பொருள் தோற்றம், மறதி முதலியவை இருத்தல்.
13.கிராடினிகோ நோயியம் என்றால் என்ன?
6ஆம் மூளை நரம்பும் பழுதுபடல்; ஒற்றைத் தலைவலி.
14.ஹேமன்ரிச் நோயியம் என்றால் என்ன?
நுரையீரல் நார்க்கட்டி.
15.ஹார்னர் நோயியம் என்றால் என்ன?
விழிக்கோளம் அமிழ்தல், கீழிமை உயர்தல், மேலிமை இறங்குதல்.
16.கார்ட்டஜனர் நோயியம் என்றால் என்ன?
ஒரு கால்வழிக் கோளாறு. இதயம் இடம் மாறியிருக்கும். புழையழற்சி உண்டாகும்.
17.லச்னிகன் நோயியம் என்றால் என்ன?
ஒரு கால்வழிக் கோளாறு. பியுரின் வளர்சிதை மாற்றம் பழுதுபடும்.
18.மார்பன் நோயியம் என்றால் என்ன?
ஒரு கால்வழிக் கோளாறு. கை விரல்களும் கால் விரல்களும் நீண்டிருக்கும்.
19.மேரி நோயியம் என்றால் என்ன?