75
முன் மூளையடிச் சுரப்பி மிகுதியாகச் சுரப்பதால் முனைப் பெருவளர்ச்சி முனைப்பாக இருக்கும்.
20.மில்கியுலிக் நோயியம் என்றால் என்ன?
உமிழ்நீர்ச் சுரப்பிகளும் கண்ணீர்ச்சுரப்பிகளும் இரு பக்க விரிவு கொண்டிருக்கும்.
21.முன்சாசன் நோயியம் என்றால் என்ன?
உண்மையாக இல்லாத நோய்களுக்குப் பண்டுவம் செய்து கொள்ள மருத்துவமனைக்கு அடிக்கடிச் செல்லுதல்.
22.நூனன் நோயியம் என்றால் என்ன?
டர்னர் நோயியம் ஆண் புற முத்திரைத் தொடர்பானது. உயரக் குறைவு, தாழ்ந்த காதுகள் முதலியவை இருக்கும்.
23.சூல்பைச் சிரை நோயியம் என்றால் என்ன?
சிறுநீர்க்குழாய் தடைப்படுதல். இதற்குக் காரணம் இந்தச் சிரையே.
24.பூட்டணம்-டானா நோயியம் என்றால் என்ன?
தண்டுவடச் சிதைவு.
25.ரெய்டர் நோயியம் என்றால் என்ன?
சிறுநீர்வழி அழற்சி, விழிவெண்படல அழற்சி, மூட்டழற்சி ஆகிய மூன்றும் சேர்ந்தது.
26.ஸ்வாக்மன்-டயமண்ட் நோயியம் என்றால் என்ன?
கணயநீர்ச்சுரப்புக் குறைநோய். குருளைத் தன்மை ஏற்படும்.
27.ஸ்டெயின்-லெவன்தல் நோயியம் என்றால் என்ன?
வீட்டுவிலக்கின்மை கோளாறு.
28.டாசிக்-பிங் நோயியம் என்றால் என்ன?
பெரும் இதயக் குழாய்கள் மாறியமைதல்.
29.நச்சுஅதிர்ச்சி நோயியம் என்றால் என்ன?
கடும்நோய். அதிகக் காய்ச்சல், குமட்டல், கழிச்சல், உயர் குருதியழுத்தம் முதலியவை இருக்கும்.
30.வெர்னர் நோயியம் என்றால் என்ன?
மூப்பு முதிர்ச்சி முன்னரே ஏற்படுதல். நரைமயிர் உண்டாகும்; மயிர் உதிரும், கண்புரை ஏற்படும்.
31.விஸ்காட்-ஆல்ட்ரிச் நோயியம் என்றால் என்ன?