பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76


நாட்பட்ட தோல்படை, குருதிச்சோகை முதலியவை ஏற்படும். தடுப்பாற்றல் குறை நோய்.


32.பார்க்கின்சன் நோய் என்றால் என்ன?

இது ஒரு நரம்புக் கோளாறு நோய். 40 வயதிற்குப் பின் வருவது. நடுக்கம், தசைவிறைப்பு, இயக்கச்செயல் குறைவு முதலியவை இருக்கும். மறைந்த காங்கிரஸ் தலைவரும் கேரளா ஆளுநருமான இராமச்சந்திரன் அவர்களுக்கு இந்நோய் இருந்தது.


33.பேண்டி நோயியம் என்றால் என்ன?

குருதிச்சோகை இருக்கும். உணவு வழியிலிருந்து அடிக்கடி குருதி கசியும். உயர் குருதியழுத்தத்தால் வெள்ளணுக் குறையும், மண்ணிரல் வீக்கமும் ஏற்படும்.


34.கிலின்பெல்டர் நோயியம் என்றால் என்ன?

மனிதப் பிறவிகளிடத்துக் காணப்படும் நிறப்புரிப் பிறழ்ச்சி. ஒருவர் 2x நிறப்புரிகளையும் ஒரு y நிறப்புரியையும் (x, y) பெற்றிருத்தல். அதாவது, புற முத்திரை நிலையில் நோக்க, ஆண்கள் மலடு. இரண்டாம் நிலைப் பண்புகளை வெளிப்படுத்தலாம்.


35.ஆல்விமர் நோயியம் என்றால் என்ன? மூளைப்புறணி சிதைதல். இதனால் நினைவாற்றல் நீங்கும். பக்கவாதம் உண்டாகும். பேச இயலாது.


13. நோய்களும் நோய்க்கூறுகளும்

1. நோய்கள்


1.நோய் இயல் என்றால் என்ன?

நோய்களை நுணுகி ஆராயுந்துறை.


2.ஏதுவியல் என்றால் என்ன?

நோய்க் காரணங்களை ஆராயுந்துறை அல்லது நோயறிதல்.


3.மருத்துவநோய் இயல் என்றால் என்ன?