பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93



2. மருந்தாளுமியல் என்றால் என்ன?

மருந்துகள் செயதல், அவற்றைப் பயன்படுத்தல் ஆகியவற்றை ஆராயுந்துறை. உடல் நலவியலின் ஒரு பிரிவு.

3. மருந்தியல் நூல் என்றால் என்ன?

மருந்துகள் பற்றிய முறையான கையேடு

4. மருந்தகம் என்றால் என்ன?

1. மருந்துகள் விற்குமிடம்
2. மருந்துகள் செய்யும் இடம்.

5. பகுத்தறிமருந்து வடிவமைப்பு என்றால் என்ன?

இது கூடுகை வேதியியல் சார்ந்தது. இதில் தேர்வு மூலக்கூறுகள் சமாளிக்க கூடிய அளவுக்குக் குறைக்கப்படும். இலக்கு மூலக்கூறு சேர்க்கப்படும்.

6. துயில் மூட்டி என்றால் என்ன?

உறக்கத்தைத் தூண்டும் மருந்து.

7. அனல் குறைப்பி என்றால் என்ன?

காய்ச்சலின் பொழுது வெப்பநிலையினைக் குறைக்கும் மருந்து.

8. பார்பிடியுரேட்டுகள் என்றால் என்ன?

பார்பிடூரிகக் காடியிலிருந்து பெறப்படும் வெண்ணிறப் படிகங்கள். தணிப்பு மருந்துகள்.

9. சல்பா மருந்துகள் என்பவை யாவை?

சல்பனாமைடு தொகுதியுள்ள கரிமக் கூட்டுப் பொருள்கள் சேர்ந்த கலவை. நுண்ணுயிரி நோய்களைக் கட்டுப்படுத்தவல்லது.

10. சல்பா கொனடைன் என்பது யாது?

சல்பனாமைடு, வயிற்றுப் போக்கை நீக்கும் மருந்து.

11. எல்எஸ்டி என்றால் என்ன?

லைசர்சிக் காடி இரு எத்திலமைடு. உளக்கோளாறு உண்டாக்கும் மருந்து. மனமயக்கத்தையும், தடுமாற்றத்தையும் தருவது. இளைஞர்கள் இக்கொடிய பழக்கத்திற்கு அடிமைகள்.

12. ஒலிம்பியாடேன் என்றால் என்ன?