இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
96
இதனால் முட்டை கருப்பைக்குச் செல்லாது.
17. சீம்பால் என்பது என்ன?
- கருவுற்ற இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப்பின் முலையிலிருந்து வரும் பால் போன்ற நீர். உண்மைப்பாலுக்கு முந்தி வருவது இது.
18. விந்து குழல் துணுக்கம் என்றால் என்ன?
- ஒவ்வொரு விந்துகுழலின் பகுதியை நீக்குதல். இதனால் விந்து நீரில் விந்தணு சேர்வது தடுக்கப்படும். கருத்தடைக்கு ஆண்கள் செய்து கொள்வது.
19. கருச்சிதைவு என்றால் என்ன?
- கருப்பையிலிருந்து கரு முதிராமல் முன்னரே வெளியேறுதல். இது இயற்கைக் கருச்சிதைவு, செயற்கைக் கருச்சிதைவு என இருவகை.
20. பிறப்புக் கட்டுப்பாடு என்றால் என்ன?
- கருத்தடைக் கருவிகள் மூலம் இனப்பெருக்கத்ததைக் கட்டுப்படுத்தல். இதனால் பிறப்பு வீதம் குறையும்.
21. ஆண்களுக்குரிய கருத்தடைக் கருவி யாது?
- ஆணுறை.
22. பெண்களுக்குரிய கருத்தடைக் கருவிகள் யாவை?
- வளையம், பசை, மாத்திரை.
23. கருத்தடை உண்டாக்கும் இயற்கை வழி யாது?
- வீட்டு விலக்கு ஆனபின் முதல் வாரத்தின் கடைசியிலும் இறுதி வாரத்திலும் மெய்யுறுபுணர்ச்சி இருத்தல் நலம்.
24. குடும்பநலத் திட்டம் என்றால் என்ன?
- கருத்தடைக் கருவிகளைப் பயன்படுத்திக் கணவனும் மனைவியும் குழந்தை பெறுவதின் அளவைக் குறைத்தல். இரண்டே போதும் என்பது தற்பொழுதுள்ள கருத்து.
25. வீட்டு விலக்கு நிற்றல் என்றால் என்ன?
- 40 வயதில் பெண்களிடம் வீட்டு விலக்கு ஒய்தல்.
26. வீட்டு விலக்கு சுழற்சி என்றால் என்ன?
- பெண்களிடம் 28 நாட்களுக்கு ஒரு முறை நான்கு நாட்கள் குருதிக் கசிவு ஏற்படும் நிகழ்ச்சி.
27. இதிலுள்ள நான்கு நிலைகள் யாவை?