பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113


இன்சுலின், இண்டர்பெரான்.

25. மரபணுப் புரட்சி என்றால் என்ன?

மரபாக்கம் மூலம் வேளாண்மை, மருத்துவம் முதலிய துறைகளில் அமைதியாக நடைபெற்று வரும் முன்னேற்றம்.

26. மரபணுப்பண்டுவம் என்றால் என்ன?

மரபணுக் குறை நீக்கம். குறைபாடுள்ள மரபணுக்களை மரபணுவாக்க நுணுக்கங்கள் மூலம் மாற்றியமைத்தல். ஆய்வுநிலையில் உள்ளது. இறுதியான நோக்கம் 5000 அளவுக்கு மேற்பட்ட மரபணு நோய்களைப் போக்குவதே.

27. மரபுக்குறியம் என்றால் என்ன?

ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு மரபு வழிப்பண்புகள் செல்வதைப் பற்றிய நெறிப்பாடு. உயிரணு நிறப்புரியின் மூலக்கூறு அமைப்பினால் இது வெளிப்படுகிறது.

28. டாக்டர் வெர்மா அவர்களின் பங்பளிப்பு யாது?

இவர் அமெரிக்கச் சார்க் நிலையத்தைச் சார்ந்தவர். நச்சிய ஊடக மரபணு மாற்றுகையைப் பயன்படுத்துவதில் முன்னோடி. இது மரபணுப் பண்டுவத்திற்கு ஓர் அணுகுமுறையாகும். இவர் கருத்துப்படி மரபணுக்கள் நோய்வாய்படுவதால் ஏற்படுவதே புற்றுநோய்.

29. மரபணுப் பிணைவு என்றால் என்ன?

ஓர் மரபணு மற்றொரு மரபணுவுடன் நொதியின் மூலம் இணைதல்.

30. உயிரியல் கட்டுப்பாடு என்றால் என்ன?

வேதிப்பொருள்களைத் தவிர்த்து, இரையாக்கிகளைக் கொண்டு தொற்றுயிர்களைக் கட்டுப்படுத்துதல். எ-டு. மீன்களால் கொசுக்களை அழித்தல், பாம்புகளால் எலிகளைக் கொல்லுதல்.

31. உயிரி வன்முறை என்றால் என்ன?

தொண்டையடைப்பான் நோய்ச்சிதல்களை பயன்படுத்துவது ஆகும். செப்டம்பர் 11 தாக்குதலுக்குப்பின் இது வன்முறையாளர்களால் பயன்படுத்தப்பட்டது. இது ஓர்

வி.8.