பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119


பூச்சிகள், ஈக்கள், கொசுக்கள் முதலியவற்றால் ஏற்படுவது.

35. விலங்குகளிடம் தொற்றா நோய்களுக்குக் காரணிகள் யாவை?

1. ஊட்டக் குறை
2. வளர்சிதை மாற்றக் கோளாறுகள்
3. நச்சுகள்
4. புண்கள்
5. கட்டிகள்.

36. கால்நடை மருத்துவக் கல்வியைப் வளர்ப்பவை யாவை?

1. கால்நடை மருத்துவக் கல்லூரிகள்
2. கால்நடை மருத்துவமனைகள்
3. கால்நடை மருத்துவப் பல்கலைகழகம். (தமிழ் நாடு)


15. நோபல் பரிசுகள்

1. தொண்டை அடைப்பானுக்கு எதிர் நச்சைக் கண்டறிந்தவர் யார்?

அடால்ப் வான் பெரிங் 1901 இல் நோபல் பரிசுப் பெற்றார்.

2. காலரா என்புருக்கி நோய் ஆகிய இரண்டையும் தோற்றுவிக்கும் நுண்ணுயிரைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

இராபர்ட் காச் 1905 இல் நோபல் பரிசு பெற்றார்.

3. பிளாஸ்மோடியத்தைக் கண்டுபிடித்தற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

லூயி லெவரன் 1907இல் நோபல் பரிசு பெற்றார்.

4. கட்டிலா நொதித்தல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

எட்வர்டு புக்னர் 1907 இல் நோபல் பரிசு பெற்றார்.

5. தடுப்பாற்றல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

பால் எரிலிச் 1908 இல் நோபல் பரிசு பெற்றார்.