பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20


17. தனி வளர்ச்சி என்றால் என்ன?

உயிரணு நிலையிலிருந்து முதிர்ச்சி நிலை வரையுள்ள ஒரு தனி உயிரியின் வளர்ச்சி.

18. பெரும் பிரிவு என்றால் என்ன?

விலங்குலகின் ஒவ்வொரு பெருந் தொகுதியும் ஒரு பெரும் பிரிவாகும்.

19. விலங்குலகம் எத்தனை பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?

11 பெரும் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

20. விலங்குகளின் வகுப்புகள் யாவை?

1. மீன்கள் - கெண்டைமீன்
2. நிலம் நீர் வாழ்வன - தவளை
3. ஊர்வன - முதலை
4. பறவைகள் - பருந்து
5. பாலூட்டிகள் - பசு

21. ஒரு விலங்கை வகைப்படுத்தி காட்டுக.

1. உலகம் - விலங்கு
2. பெரும்பிரிவு - முதுகுத்தண்டு உள்ளவை.
3. வகுப்பு - பாலூட்டிகள்
4. பேரினம் - பெலிஸ்
5. சிறப்பினம் - டைகிரிஸ், பெலிஸ் டைகிரிஸ் (புலி)


5. முதுகு எலும்பு இல்லாத விலங்குகள்

1. அமீபா என்பது யாது?

முதல் தோன்றிகள் பிரிவைச் சார்ந்த ஒற்றைக்கண்ணறை விலங்கு உயிரி. இதன் ஒற்றைக் கண்ணறையே உடல் செயல்கள் யாவற்றையும் செய்வது. இது அடிக்கடித்தன் உருவத்தை மாற்றுவது.

2. பரமேசியம் என்பது யாது?

முன்தோன்றி இனத்தைச் சார்ந்த ஓரணு விலங்கு.