பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
33

பறக்க இயலாத நியூசிலாந்து பறவை. அந்நாட்டின் இலச்சினை. பகலில் உறங்கி இரவில் இரை தேடுவது.

42. பறவைகளில் மிகப்பெரியது எது?

நெருப்புக் கோழி, ஆப்பிரிக்காவில் வாழ்வது. உயர்வரை உயரம் 3 மீ. எடை 150 கிகி. விரைவாக ஓடுவது. இதன் சிறகுகள் விலைமதிப்புள்ளவை.

43. பறவை வழியறிதல் என்றால் என்ன?

பறவைகள் பறத்தலை உற்று நோக்கி, அவை செல்லும் வழியறிதல்.

44. மாறா வெப்பநிலை விலங்குகள் என்றால் என்ன?

சூழ்நிலைக்கேற்றவாறு மாறாமல் உடல் வெப்பநிலை ஒரே சீராக இருக்கும் விலங்குகள். எ-டு பறவைகள், பாலூட்டிகள்.

45. இறகுகள் என்பவை யாவை?

பறவையின் உடல் முழுதும் அமைந்துள்ள புறத்துறுப்புகள். உடலுக்குக் கதகதப்பு அளிப்பவை.

46. உடல் இறகு என்றால் என்ன?

பறவையின் உடலுக்கு இது உருவத்தை அளிப்பது. உடல் கதகதப்பிற்கும் பறத்தலுக்கும் காரணம்.

47. ஒர் இறகின் கொக்கியமைப்பின் பயன் யாது?

இக்கொக்கியமைப்பு காற்றுத் தடையை உண்டாக்கிப் பறவை பறக்க உதவுகிறது.

48. இறகுத் தின்னிகள் என்பவை யாவை?

இறகுகளைத் தின்னும் இறகிலாப் பூச்சிகளான ஒட்டுண்ணிகள். எ-டு பறவைப்பேன், தலைப்பேன்.

49. சூல்நாண் என்றால் என்ன?

பறவை முட்டையின் மஞ்சள் கருப்பையை நிலை நிறுத்தும் கயிறு.

50. தீனிப்பை என்றால் என்ன?

உட்கொண்ட உணவுப் பொருளைச் சேமித்து வைக்கப் பயன்படுவது. எ-டு பூச்சிகள், பறவைகள்.

51. அரைவைப்பை என்றால் என்ன?

இரண்டாம் இரைப்பை பறவைகள், வளைய உடலிகள்

வி.3.