பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1.5 மீட்டர் அகலமிருக்கும்.

88. பெருங்கரடி என்பது யாது?

கரடி போன்ற பாலூட்டி. கறுப்பும் வெள்ளையும் கலந்தது. 1.8 மீ. உயரம். சீனாவிலும் திபெத்திலும் காணப்படுவது.

89. நம் நாட்டில் சிங்கம் எங்கு வாழ்கிறது?

அஸ்ஸாம் காடுகளில் வாழ்கிறது.

90. புலி என்பது யாது?

பூனைக்குடும்பத்தை சார்ந்த கொடிய ஊன் உண்ணும் விலங்கு. இது அழிந்து வருவதால் இதைப் பாதுகாக்க புலிப் பாதுகாப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டு, நல்ல பயனளித்து வருகிறது. நம் நாட்டிற்கே உரியது.

91. வேங்கை என்பது யாது?

பூனைக்குட்டி குடும்பத்தைச் சார்ந்தது. பெரும் புள்ளிகள் இருக்கும். ஆப்பிரிக்கா, ஆசியா நாடுகளில் காணப்படுவது.

92. வேங்கையின் சிறப்பு யாது?

நிலம் வாழ் ஊனுண்ணி. புலியை ஒத்த சீற்றமிகு விலங்கு.

ஏனைய விலங்குகளை வேட்டையாடுவது.

93. மதலைப்பை விலங்குகளுக்கு இரு எடுத்துக்காட்டுகள் கூறுக.

கங்காரு, கோலா.

94. கோலா என்பது யாது?

மதலைப்பையுள்ள ஆஸ்திரேலிய விலங்கு. 1 மீட்டர் நீளமுள்ளது. மரம் ஏறும்.

95. கங்காரு என்பது என்ன?

மதலைப்பை உடைய பெரிய ஆஸ்திரேலிய பாலூட்டி இதன் நீண்ட பின்கால்கள் குதித்தோடப் பயன்படுபவை. மதலைப்பை குட்டிகளைச் சுமந்து செல்ல உதவுகிறது.

96. சின்னாய் என்றால் என்ன?

வட அமெரிக்க விலங்கு. நாய் போன்று குரைக்கும். அணில் போன்று கொறிக்கும்.

97. கடல் முள் எலி என்றால் என்ன?

பாலூட்டியான சிறிய கடல் விலங்கு. கூரிய முட்கள்