பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39


இதன் உடலை மூடியுள்ளன.

98. தொப்பூழ்க்கொடி என்றால் என்ன?

கருவின் அடிவயிற்றைச் சூல் கொடியோடு இணைக்கும் திகவடம். இதன் வழியே குருதி மூலம் உள்ளே ஊட்டப்பொருள் செல்கிறது. வெளியே கழிவுப்பொருள் வருகிறது.

99. சூல்கொடி என்றால் என்ன?

நஞ்சுக்கொடி வளரும் கருவைக் கருப்பபையோடு இணைத்து ஊட்டம் வழங்கும் கொடி,

100. முதுகுத்தண்டுடை விலங்குகள் யாவை?

இவற்றின் வளர்ச்சியின் ஒரு நிலையில் முதுகுதண்டு, செவுள் பிளவுகள், உட்குழாயுள்ள நரம்பு வடம் ஆகிய மூன்று சிறப்பு உறுப்புகள் காணப்படும். எ-டு ஆம்பி யாக்சஸ்.

101. மயிர் என்பது என்ன?

பாலூட்டிகளின் மேல்தோல் வளர்ச்சி, தாவரப் புறத்தோலின் வளர்ச்சி. உயிர் நின்ற பிறகும் வளர்வது மயிர்.

102. குளம்பு பிளவுபட்ட விலங்குகள் யாவை?

ஆடு, மாடு.

103. குளம்பு பிளவுப்படாத விலங்கு எது?

குதிரை, கழுதை.

104. பனிக்குடம் என்றால் என்ன?

நிலம் வாழ் முதுகெலும்பு விலங்குகளின் கருப்படலம், கருவினைப் பாதுகாப்பது.

105. பூழ்ப்பை என்றால் என்ன?

பறவை, ஊர்வன, பாலூட்டி முதலிய முதுகெலும்புள்ள விலங்குகள் மூச்சு விடுவதற்காகக் கருவில் காணப்படுவது.

106. ஐவிரல் உறுப்பு என்றால் என்ன?

ஐந்துவிரல்களைக் கொண்டது. கை, கால்.

107. முதுகுத்தண்டு என்பது யாது?

உயிரணுக்களான தனிவடம். தண்டுவடம் முன்னோடி முதுகெலும்பு தோன்றியதும் மறைவது, சில கீழனி விலங்குகளில் வாழ்நாள் முழுதும் நிலைத்திருப்பது.