இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
61
8. நரம்பு மண்டலம்
161. நரம்பு மண்டலம் என்றால் என்ன?
- மூளையும் அதன் பகுதிகளும் அதனோடு தொடர்பு கொண்ட நரம்புகளும் அடங்கிய தொகுதி. உடலின் வேலைகள் யாவற்றையும் ஒருமுகப்படுத்துவது.
162. கஜால் அறிவித்த கொள்கை யாது?
- நரம்பு மண்டலம் நரமபணுக்களாலும் அதன் பகுதிகளாலும் ஆனது என்னும் கொள்கையை இவர் 1906 இல் அறிவித்தார்.
163. கோல்கை கண்ணறைகளை நரம்பு மண்டலத்தில் கண்டறிந்தவர் யார்? எப்பொழுது?
- கோல்கை. 1883இல் கண்டறிந்தார்.
164. மைய நரம்பு மண்டலம் என்றால் என்ன?
- மூளை, தண்டுவடம் அவற்றோடு தொடர்புள்ள நரம்புகள் ஆகியவற்றைக் கொண்டது. உடலின் தலைமைச் செயலகம்.
165. மையநரம்பு மண்டலத்தின் வகைகள் யாவை?
- 1. தானியங்கு நரம்பு மண்டலம்.
- 2. பரிவு நரம்பு மண்டலம்.
- 3. துணைப் பரிவு நரம்பு மண்டலம்.
- இவை மூன்றும் மூளையின் கட்டுப்பாடு இல்லாமல் தாமாக இயங்குபவை. உள்ளுறுப்புகளின் வேலைகளைக் கட்டுப்படுத்துபவை.
166. தானியங்கு நரம்புமண்டலம் என்றால் என்ன?
- இது பரிவு நரம்பு மண்டலம், மைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதி. மூளையின் கட்டுப்பாடில்லாமல் தானாக இயங்குவது. உள்ளுறுப்புத் தசைகளைக் கட்டுப்படுத்துவது.
167. பரிவு நரம்பு மண்டலம் என்றால் என்ன?
- இது தானியங்கு நரம்பு மண்டலத்தின் ஒரு பிரிவு. இதன் நரம்புகள் இதயம், நுரையீரல் முதலிய உள்ளுறுப்புகளுக்குச் சென்று அவற்றைக் கட்டுபடுத்துகின்றன.