இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
67
214. வளர்தூண்டிகளின் சிறப்பை யார் எப்பொழுது வற்புறுத்தினர்?
- 1902 இல் வில்லியம் வேலிஸ், எர்னஸ்ட் ஸ்டார்லிஸ் ஆகிய இருவரும் வற்புறுத்தினர்.
215. இலாங்கர்கன் திட்டுச் சுரப்பிகள் என்றால் என்ன?
- இவற்றை 1869 இல் இலாங்கர்கன் விளக்கினார். இன்சுலினைச் சுரப்பவை, கணையத்திலுள்ளவை. இச்சுரப்பு சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவது.
216. அட்ரினலின் எப்பொழுது யாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1901 இல் ஜோகிச்சி டாகாமைன் (ஜப்பான்), தாமஸ் பெல் ஆகிய இருவரும் தனித்தனியே 1901இல் அட்ரினலைக் கண்டறிந்தனர்.
217. இன்சுலின் பிரிப்பை அறிவித்தவர்கள் யார்? எப்பொழுது?
- 1922இல் பிரடரிக் பேண்டிங், சார்லஸ் பெஸ்ட் ஆகிய இருவரும் அறிவித்தனர்.
218. கழுத்துக் கழலை என்றால் என்ன?
- தைராக்சின் சுரப்பில் அயோடின் ஊட்டம் குறைகின்ற பொழுது ஏற்படும் குறைநோய். தொண்டைச் சுரப்பி பருப்பதால், கழுத்து முன்பகுதியில் கரளை உண்டாகும்.
219. தைமஸ் என்பது யாது? அதன் வேலை என்ன?
- ஒரு நாளமில்லாச் சுரப்பி. தடுப்புத் திறனை உடலுக்கு அளிப்பது.
220. தைராய்டு என்பது யாது? அதன் சுரப்பு யாது? அதன்
வேலை என்ன?
- இது நாளமில்லாச் சுரப்பி. இதன் சுரப்பு தைராக்சைன், இதன் வேலைகள்
- 1. உடல் வளர்ச்சியையும் வளர்சிதை மாற்றத்தையும் ஒழுங்குபடுத்துகிறது.
- 2. அறிவுவளர்ச்சிக்கும் நினைவாற்றலுக்கும் காரணம்.
221. இச்சுரப்பியின் குறை நோய்கள் யாவை?
- கழலை, குருளைத்தன்மை.
222. ஆண்ட்ரோஜன் என்றால் என்ன?
பால் தூண்டிகளில் ஒன்று. மீசை முளைத்தல், அக்குள் மயிர் முளைத்தல் முதலிய இரண்டாம் நிலைப்-