பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79


கொழுப்பு நீர்ச் சுரப்பிகள். இவை பருக்கும் பொழுது கேட்டலும், மூச்சுவிடுதலும் கடினமாக இருக்கும்.

322. ஒரு பொருளின் மணத்தை உணர்வதற்கு அது எந்நிலையில் இருக்க வேண்டும்?

வளி நிலையில் இருக்க வேண்டும். இதை முகர் நரம்பு மூளைக்குத் தெரிவிக்கிறது.

323. நாக்கு எவற்றின் மூலம் சுவையை அறிகிறது?

சுவை நரம்புகள் மூலம் அறிகிறது.

324. ஒரு பொருளின் சுவையை அறிய அது எந்நிலையில் இருக்க வேண்டும்?

நீர்மநிலையில் அதாவது கரைசல் நிலையில் இருக்க வேண்டும். சுவை நரம்புகள் சுவையை மூளைக்குத் தெரிவிக்கின்றன.

325. நாக்கு அறியும் பல சுவைகள் யாவை?

நாக்கின் நுனி இனிப்பையும், அடி கசப்பையும், பக்கங் கள் புளிப்பையும் உணர்கின்றன. உவர்ப்பையும் துவர்ப்பையும் எல்லாச் சுவையரும்புகளும் உணர்கின்றன.


9. உணவும் ஊட்டமும்

1. வைட்டமின்கள்

1. வைட்டமின்களைக் கண்டறிந்தவர் யார்? எப்பொழுது?

ஹாப்கின்ஸ் 1906 இல் கண்டறிந்தார்.

2. வைட்டமின்கள் என்றால் என்ன?

இவை அரிய கரிமச் சேர்மங்கள், உயிரியல் வினை ஊக்கிகள். உணவில் சிறு அளவில் இருந்து பெரும் மாற்றங்களை உண்டாக்குபவை.

3. வைட்டமின் A இன் சிறப்பென்ன?

கொழுப்பில் கரைவது. இது கரோட்டின் வழிப்பொருள்.

4. இதன் இரு வகைகள் யாவை?