பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80


வைட்டமின் A1 - ரெட்டினால்
வைட்டமின் A2 - டிகைட்ரோ-ரெட்டினால்

5. கரோட்டின் என்றால் என்ன?

மஞ்சள் நிறத்தையும் கிச்சலி நிறத்தையும் உண்டாக்கும் நிறமி. வைட்டமின் ஏ முன்னோடி.

6. வைட்டமின் A வின் வேலைகள் யாவை?

1. தோல்நலத்திற்கும் உடல் வளர்ச்சிக்கும் காரணம்.
2. இரவுப் பார்வை, தடுப்பாற்றல் ஆகியவற்றிற்குக் காரணம்.

7. வைட்டமின் A உள்ள உணவுப் பொருள்கள் யாவை?

பால், வெண்ணெய், கல்லீரல், மீன் எண்ணெய்.

8. இதன் குறைநோய் யாது?

இரவுக்குருடு

9. இரவுக்குருடு என்றால் என்ன?

இரவில் பார்வை தெரியாமை. வைட்டமின் A குறைவினால் ஏற்படுவது.

10. வைட்டமின் B1 இன் வேலை யாது?

பசியைத் துண்டி நரம்புகளை நன்னிலையில் வைப்பது.

11. இது அடங்கியுள்ள உணவுப்பொருள்கள் யாவை?

முட்டை, கனிகள், முளைக்கோதுமை, பச்சைப்பட்டாணி.

12. இதன் குறைநோய் யாது?

பெரிபெரி.

13. நியோசின் என்றால் என்ன?

நீரில் கரையக்கூடிய B தொகுதி வைட்டமின்களில் ஒன்று. வேறு பெயர் நிகோடெணிகக் காடி

14. தோல் கரடு என்னும் தோல் நோயைத் தடுப்பது எது?

வைட்டமின் B1

15. ரிபோபிளேவின் என்றால் என்ன?

வைட்டமின் B2 உயிரணுவளி ஏற்றத்திற்குத் காரணமானது.

16. வைட்டமின் B2 இன் வேலை என்ன?

தோல்நலத்தையும் தசை நலத்தையும் பாதுகாப்பது.