பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82


பசுங்காய்கறிகளில் உள்ளது. இது குறையுமானால் குருதிச்சோகை ஏற்படும்.

31. பயாட்டின் என்றால் என்ன?

வைட்டமின் B தொகுதியில் ஒன்றான H. இதன் துணை நொதி R. குடல் தாவர ஊட்டத்தால் தொகுக்கப்படுவது. இது குறையுமானால் தோலழற்சி உண்டாகும்.

32. பெரிபெரி என்றால் என்ன?

வைட்டமின் B1 குறைவினால் ஏற்படும் நோய். பச்சரிசி உண்ணுவது ஒரு முக்கியக் காரணம்.

33. பெரிபெரியின் அறிகுறிகள் யாவை?

1. நரம்பழற்சியால் வலி
2. ஒரு பக்கவாதம்
3. தசையழிவு
4. உளக்குலைவு
5. மாரடைப்பு

34. வைட்டமின் B12லுள்ள ஏனைய வைட்டமின்கள் யாவை?

பயாடின், லிபாயிகக்காடி, போலிகக்காடி.

35. வைட்டமின் C இன் வேலை என்ன?

இதன் வேதிப் பெயர் அஸ்கார்பிகக்காடி எலும்பையும் இதயத்தையும் நன்னிலையில் வைப்பது.

36. இது அடங்கியுள்ள உணவுப்பொருள்கள் யாவை?

நாரத்தை, எலுமிச்சை, தக்காளி, நெல்லிக்கனி.

37. இதன் குறைநோய் யாது?

ஸ்கர்வி

38. வைட்டமின் Dயின் வேலை யாது?

இதன் வேதிப்பெயர் கால்சிபெரால். கொழுப்பில் கரைவது. கால்சிய வளர்சிதை மாற்றத்திற்குக் காரணம்.

39. இது அடங்கியுள்ள உணவுப்பொருள்கள் யாவை?

மீன் எண்ணெய், நெய்.

40. இதன் குறைநோய் யாது?

ரிக்கட்ஸ்.

41. வைட்டமின் Dயின் வகைகள் யாவை?

வைட்டமின் D2 - எர்கோகால்சிபெரால்