பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93


மிகக் கொடிய கொள்ளை நோய் விப்ரியோகோமா என்னும் நுண்ணுயிரியால் உண்டாவது. நீரினால் பரவுவது.

28. இதன் அறிகுறிகள் யாவை?

கஞ்சி போன்ற கழிவு வெளியேறும், குமட்டல், தசைப் பிடிப்பு காணப்படும்.

29. இதைப்போக்கும் வழிகள் யாவை?

உடன் உப்பு நீர் உட்கொள்ள வேண்டும்.தடுப்பூசிபோட்டுக் கொள்ள வேண்டும்.

30. பச்சைநோய் என்றால் என்ன?

இளம் பெண்களிடம் காணப்படும் ஒரு வகை குருதிச் சோகை.

31. தீயுறுகட்டி என்றால் என்ன?

சில புதுக்கணியங்கள் மிகுதியாகப் பெருகுதல். இவை தடுக்கப்படாவிடில் புற்று நோயாக மாறும்.

32. சர்க்கரை நோய் என்றால் என்ன?

மாப்பொருள் வளர்சிதை மாற்றக் குறைவால் ஏற்படும் மரபுவழி நோய். உணவுக் கட்டுப்பாடு, ஊசி போட்டுக் கொள்ளுதல் ஆகிய இரண்டின் மூலம் கட்டுப்படுத் தலாம்.

33. நோய்களில் உடன் கொல்லக் கூடியது எது?

மாரடைப்பு நோய்.

34. நோய்களில் இன்னும் குணப்படுத்த இயலாத நோய் எது?

புற்றுநோய்.

35. தீராத நோய்களை எப்படிப் போக்க இயலும்?

ஆராய்ச்சி நிலையில் இருக்கும் மரபுப் பண்டுவம் செயல் நிலைக்கு வருமானால், இந்நோய்கள் பெனிசிலின் ஊசிபோட்டு நீக்குவது போலப் போக்கப்படும்.

36. பெனிசிலின் வந்த பின் அறவே ஒழிந்த நோய் எது?

பிளவை நோய்.

37. நைட்ரஜன் சமநிலை என்றால் என்ன?

ஓர் உயிரி நைட்ரஜனை உட்கொள்வதற்கும் வெளியேற் றுவதற்கும் இடையே உள்ள வேறுபாடு வளரும் குழந்தைகளிடத்து இது நேர்க்குறி + நோயாளிகளிடத்து