பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98


இலேசான வளி, குமிழிகள், காற்றுக் கப்பல்கள் முதலியவற்றில் பயன்படுவது.

34. உப்பீனிகள் என்றால் என்ன?

இவை ஹேலஜன்கள் எனப்படும் உப்பைத் தரும் அலோகங்கள். அவையாவன: அஸ்டடைன், புரோமின், குளோரின், புளோரின், அயோடின். இவை சேர்ந்தது உப்பீனிக் குடும்பம் எனப்படும்.

35. உப்பீனியாக்கல் என்றால் என்ன?

கூடுதல், பதிலிடல் ஆகிய செயல்களினால் ஒரு கூட்டுப் பொருளில் உப்பீனி அணுக்களைச் சேர்த்தல்.

36. புளோரின் என்றால் என்ன? பயன் யாது?

வெளிறிய மஞ்சள் நிறமுள்ள வளி. பூச்சிக்கொல்லி.

37. வெடிப்புவளி என்றால் என்ன?

ஆக்சிஜனும் அய்டிரஜனும் 1:2 என்னும் வீதத்தில் சேர்ந்த கலவை. மின்னாற்பகுத்தலால் கிடைப்பது. இதை எரிக்க வலுவாக வெடித்து மீண்டும் நீராகும்.

38. ஆக்சிஜன் என்பது யாது?

உயிர்வளி. காற்றுவெளியில் இருந்து உயிர்வாழ உதவுவது. நீரில் கரைந்து நீர்வாழ் உயிர்கள் வாழவும் உதவி செய்வது. பொருள்கள் எரியவும் இன்றியமையாதது.

39. ஆக்சிஜன் செலுத்தல் என்றால் என்ன?

மூச்சுப்பரப்பில் ஈமோகுளோபினுடன் தற்காலிகமாக ஆக்சிஜனைச் சேர்த்தல்.

40. ஆக்சிஜன் ஏற்றித் தடுப்பிகள் என்றால் என்ன?

வண்ணங்கள், ரப்பர், பிளாஸ்டிக்குகள் ஆகியவற்றில் ஆக்சிஜன் ஏறுவதால் ஏற்படும் தீய விளைவுகளைத் தடுக்கும் பொருள்கள்.

41. பிறவிநிலை அய்டிரஜன் என்றால் என்ன?

புதிதாகத் தோன்றிய அய்டிரஜன். அதிக அளவு உள்ளாற்றல் பெற்றது. அண்டிமனி, சவ்வீரம், பாகவரம் ஆகியவற்றின் அய்டிரைடுகள் உண்டாக்கப் பயன்படுவது.