பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100


ஓரணு அரிய வளி, நிறமற்றது. 1898இல் இராம்சே கண்டறிந்தது. மின்குமிழ்களிலும் ஒளிவிளக்குகளிலும் பயன்படுவது.

52.கூப்பர் நிக்கல் என்பது யாது?

இயற்கை நிக்கல் அர்சனைடு நிக்கலின் முக்கியத் தாது.

53. செனாளின் பயன்கள் யாவை?

நிறமற்ற ஒற்றையணு வளி, வெப்பத் திறப்பிகள், குமிழ்கள், ஒளிர்விளக்குகள் ஆகியவற்றில் பயன்படும் மந்தவளி.

54. அம்மோனியா என்றால் என்ன?

காரமணமும் அரிப்புத் தன்மையும் கொண்ட நச்சிலா வளி.

55. இதன் பயன்கள் யாவை?

வெடிமருந்துகள் செய்யவும் உரங்கள் செய்யவும் பயன்படுவது.

56. அம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன?

நீர் ஈர்க்கும் உப்பு, நிறமற்றது, படிகமற்றது. நீரில் கரையும்.

57. இதன் பயன்கள் யாவை?

வெடிமருந்து, உரம்.

58. அம்மோனியம் சல்பேட் என்றால் என்ன?

வெண்ணிறப்படிகம். உரம்.

59. அம்மோனியம் பை கார்பனேட் என்றால் என்ன?

வெண்ணிறப்படிகம், சமையல் தூள்.

60. அம்மோனியம் கார்பனேட் என்றால் என்ன?

அம்மோனிய நெடியுள்ள வெண்ணிறப் படிகம். நீரில் கரைவது.

61. இதன் பயன்கள் யாவை?

முகரும் உப்பு. ரொட்டித் தொழிலிலும் சாயத் தொழிலிலும் பயன்படுவது.

62. புரோமின் என்றால் என்ன?

நீர்மநிலையிலுள்ள ஒரே உலோகம். தொற்றுநீக்கி மற்றும் சாயங்கள், புரோமைடுகள் செய்யப் பயன்படுவது.