பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105


வெண்ணிறத் திண்மம். இதன் உப்பு பாஸ்பேட் நீரை மென்மையாக்கவும் உரமாகவும் பயன்படுவது.

106. பாஸ்போரஜன் என்றால் என்ன?

இது மற்றொரு பொருளில் நின்றொளிர்தலை உண்டாக்கும் பொருள். துத்தநாகச் சல்பைடில் மாங்கனீஸ் இரு சல்பைடு இதை உண்டாக்கும்.

107. பாசுவரிகக்காடிப் பகுப்பு என்றால் என்ன?

பாசுவரிகக் காடியின் தனிமங்களைப் பகுத்து ஒரு சேர்மத்தின் மூலக்கூறில் சேர்த்தல்.

108. பாசுவரச் சேர்மமாக்கல் என்றால் என்ன?

சர்க்கரையைப் பாகவரத்தின் கூட்டுப் பொருள் ஆக்கும் முறை. இக்கூட்டுப் பொருளைப் பிரிக்க உயிர்ச் செயல்களுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்கும்.

109. பாசுவரம் என்பது யாது?

ஓர் அலோகத்தனிமம், கெட்டிநிலையில் உள்ளது.

110. இதன் பண்புகள் யாவை?

1. புற வேற்றுமை உண்டு. வெண்பாசுவரம், சிவப்புப் பாசுவரம். 2. வெண்பாசுவரம் இருட்டில் ஒளிரும் காற்றில் எரியும்.

111. பாசுவரத்தின் பயன்கள் யாவை?

வெண்பாசுவரம் புகைத்திரைகள், வெடிகுண்டுகள் செய்யப் பயன்படுவது. சிவப்புப் பாசுவரம் தீப்பெட்டிகள் செய்யப் பயன்படுவது.

112.எலிநச்சாகப் பயன்படுவது எது?

வெண்பாசுவரம்.

113. பாசுவர காந்தி என்றால் என்ன?

பாசுவரம் இருட்டில் ஒளிர்வதற்குப் பாசுவர காந்தி என்று பெயர்

114. வெண்பாசுவரம் ஏன் நீரில் வைக்கப்பட்டுள்ளது?

அது அறைவெப்ப நிலையில் காற்றில் எரிவது. ஆகவே, நீரில் வைக்கப்பட்டுள்ளது.

115. சூப்பர் பாஸ்பேட் என்பது என்ன?

கால்சியம் அய்டிரஜன் பாஸ்பேட் சிறந்த உரம்.