பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

117


பொருள். பூச்சி மருந்துகளிலும் ஒப்பனைப் பொருள்களிலும் பயன்படுவது.

32. அனிசோல் என்றால் என்ன?

நறுமணமும் நிறமற்றதுமான நீர்மம். நறுமணப் பொருள்களில் பயன்படுவது.

33. ஸ்கேட்டோலின் பயன் யாது?

கரையக் கூடிய வெண்ணிறப்படிகம். நறுமணப் பொருள்கள் செய்ய.

34. பயனுறுகொழுப்புக் காடிகள் என்றால் என்ன?

உணவில் இயல்பாக இருக்க வேண்டிய கொழுப்பு அமிலங்கள். எ-டு லியோலிகக்காடி.

35. கொழுப்புகள் என்றால் என்ன?

கரி, அய்டிரஜன், ஆக்சிஜன் ஆகிய மூன்று தனிமங்களையுங் கொண்ட சேர்மங்கள். எ-டு எண்ணெய், நெய். உடலுக்கு ஆற்றல் அளிப்பவை.

36. இவற்றின் வகைகள் யாவை? எவை அதிகம் பயன்படுகின்றன?

1. தாவரக் கொழுப்புகள் - தேங்காய் எண்ணெய். 2. விலங்குக் கொழுப்புகள் - நெய். தாவரக் கொழுப்புகள் அதிகம் பயன்படுகின்றன.

37. கொழுப்புக் காடிகள் என்பவை யாவை?

கரிமச் சேர்மங்கள். எ-டு பால்மாட்டிகக் காடி.

38. மெழுகு என்பது யாது?

கரையாத கொழுப்புவகை. உயிரியைப் பாதுகாக்கப் பயன்படுவது. எ-டு வெண்மெழுகு. வத்திகள் செய்யவும் கட்டு வேலையிலும் காலணித் தொழிலிலும் பயன்படுவது.

39. வெண்மெழுகு என்றால் என்ன?

தேன்மெழுகிற்கு மாற்றாக வண்ணங்களிலும் மெழுகுகளிலும் பயன்படுவது.

40. பயனுறு எண்ணெய் என்றால் என்ன?

மணமுள்ள இயற்கை எண்ணெய். எ-டு நாரத்தை எண்ணெய், பூசுஎண்ணெய்கள்.

41. ஆவியாகக் கூடிய எண்ணெய்கள் யாவை?